நியூயார்க்: ஆகஸ்ட் 1-
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆகஸ்ட் 1 முதல் இந்தியாவிற்கு எதிராக வர்த்தக வரி விதிக்கப்படும் என்று அறிவித்து இருந்தார். இன்று முதல் அந்த வரிகள் அமலுக்கு வருகின்றன. ஆனால் இந்தியா இதற்கு பதிலடி வரிகள் எதையும் விதிக்காது, இந்தியா இப்போதைக்கு வலுவான பதிலடி எதுவும் கொடுக்காது என்று டெல்லி தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்திய இறக்குமதிப் பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என அவர் தெரிவித்தார். மேலும் கூடுதல் அபராதங்கள் விதிக்கப்படலாம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இது முக்கிய சர்வதேச நிகழ்வாகும்.இந்த அறிவிப்பு குறித்து இந்திய அரசு உடனடியாக பதிலளிக்கவில்லை. பிரச்சனைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருதரப்பு நலன் கருதி அமைதி உடன்பாட்டிற்கு இந்தியா தயாராக உள்ளது என்று டெல்லி தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியா, ரஷ்யா இரண்டு நாடுகளின் பொருளாதாரமும் இறந்து போய்விட்டது.. ரஷ்யாவுடன் சேர்ந்து இந்தியா என்ன செய்தாலும் எனக்கு கவலையில்லை என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இரு நாடுகளும் தங்களின் பொருளாதாரத்தை தாங்களே அழித்துக்கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில், இந்தியாவுடன் அமெரிக்கா மிகக் குறைந்த அளவிலேயே வர்த்தகம் செய்து வருகிறது. ஏனெனில், இந்தியாவில் விதிக்கப்படும் வரிகள் உலகிலேயே மிக அதிகமாக உள்ளன. இந்த அறிவிப்பு குறித்து, இந்திய அரசு எந்தவிதமான பதிலும் அளிக்காது என்றும், பேச்சுவார்த்தை மூலமாகவே இந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு நாடுகளின் நலன் கருதி ஒரு உடன்பாட்டிற்கு வர இந்தியா தயாராக உள்ளது. முன்னதாக, இரு நாடுகளும் வர்த்தக ஒப்பந்தம் குறித்து பல மாதங்களாகப் பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. ஆனால், எந்தவொரு இறுதி முடிவும் எட்டப்படவில்லை. அமெரிக்கப் பொருட்கள் இந்திய சந்தையில் எளிதாக நுழைய வேண்டும் என ட்ரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.



















