பலரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.5000.. யாருக்கெல்லாம் ஜாக்பாட்

புதுடில்லி: டிசம்பர் 5-
மத்திய அரசின் அடல் பென்ஷன் யோஜனா (APY) திட்டம், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய காலப் பாதுகாப்பை உறுதி செய்யும் முக்கிய திட்டமாகப் பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தின் இந்த ஆண்டின் கடைசி மாத தவணை தொகை, தற்போது நாடு முழுவதும் உள்ள பயனாளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, 60 சதவீத பயனாளிகளுக்கு நிதி செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது இத்திட்டத்தின் வரவேற்பை அதிகரித்துள்ளது. அடல் பென்ஷன் யோஜனா (APY) திட்டத்தின் விரிவான தகவல்களையும், அதில் சேரும் வழிமுறைகளையும் காண்போம். இத்திட்டம், வருமான வரி செலுத்தாத, 18 முதல் 40 வயதுக்குட்பட்ட சேமிப்புக் கணக்குதாரர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அமைப்புசாரா துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, நீண்டகால நிதிப் பாதுகாப்பை வழங்கி, சுயமாக ஓய்வூதியத்திற்காகச் சேமித்திட ஊக்கமளிக்கிறது.
மத்திய அரசின் அடல் பென்ஷன் யோஜனா ஏழை எளியோர், சமூகத்தில் பின்தங்கிய
பிரிவினர் மற்றும் அமைப்புசாரா துறை சார்ந்த தொழிலாளர்களுக்கு ஓய்வூதியப் பாதுகாப்பை வழங்குவதே இத்திட்டத்தின் தலையாய நோக்கமாகும். இதில் இணையும் சந்தாதாரர்கள், 60 வயதை நிறைவு செய்தவுடன் தங்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய பலன்களைப் பெறத் தொடங்குவர். அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தின் கீழ், சந்தாதாரர்கள் மாதத்திற்கு குறைந்தபட்சம் ₹1,000 முதல் அதிகபட்சம் ₹5,000 வரை உத்தரவாத ஓய்வூதியத்தைப் பெறலாம். 60 வயதை அடைந்தவுடன், இந்த ஓய்வூதியம் சந்தாதாரரின் வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும். சந்தாதாரர் இல்லாத பட்சத்தில், அதே ஓய்வூதியத் தொகை அவரது துணைக்கு வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து கிடைக்கும்.
சந்தாதாரர், துணை இருவரும் மறைந்தால், 60 வயது வரை திரட்டப்பட்ட மொத்த ஓய்வூதிய நிதி நாமினிக்குக் கிடைக்கும். மேலும்,
இத்திட்டத்திற்கான சந்தா பங்களிப்புகள், தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS) திட்டத்தைப் போலவே, வருமான வரிச் சட்டம் 80CCD(1)-ன் கீழ் வரிச் சலுகைகளைப் பெற தகுதி பெற்றுள்ளன. வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.5000 அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் சந்தாதாரர், 60 வயதை எட்டுவதற்கு முன்பே காலமானால், அவரது துணைக்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளன. முதல் வாய்ப்பு, மீதமுள்ள காலத்திற்கு கணக்கில் தொடர்ந்து பங்களித்து, கணக்கை துணையின் பெயரில் பராமரிப்பது. இதன் மூலம் ஓய்வூதிய பலன்களைப் பெறலாம்.மற்றொரு வாய்ப்பு, திட்டத்தை நிறுத்திவிட்டு, சந்தாதாரர் இதுவரை செலுத்திய பங்களிப்புகள் மற்றும் அதன் மீதான பலன்களைத் துணையால் பெற முடியும்.
அதேசமயம், சந்தாதாரர் 60 வயதை அடைந்த பிறகு காலமானால், அவரது துணைக்கு அதே ஓய்வூதியத் தொகை வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும். விரும்பினால், துணையாலும் திட்டத்தை முடித்துக்கொண்டு பலன்களைப் பெற இயலும்.