Home செய்திகள் தேசிய செய்திகள் பல்கலைக்கழகங்களின் தர மதிப்பீடு பட்டியல்! தொடர் சாதனை படைக்கும் ஐஐடி

பல்கலைக்கழகங்களின் தர மதிப்பீடு பட்டியல்! தொடர் சாதனை படைக்கும் ஐஐடி

டெல்லி, ஜூன் 18- 2027-ஆம் ஆண்டிற்கான சர்வதேச உலக பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் இந்திய கல்வி நிறுவனங்கள் பட்டியலில் டெல்லி ஐஐடி முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.
கல்வி உலகில் ரிலீஸ் ஆகும் ‘ஆஸ்கார்’ விருதுகளைப் போன்றதுதான் ‘கியூஎஸ் உலகப் பல்கலைக்கழக தரவரிசை’ (QS World University Rankings). பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி மாணவர்கள் கல்லூரியில் சேருவதற்கான முயற்சிகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில் எந்த கல்லூரி சிறந்தது என்பது குறித்து இந்திய அளவில் என்ஐஆர்எஃப் ரேங்கிங் மூலமும் கியூ.எஸ். உலக பல்கலைக்கழக தரவரிசைகளை கொண்டு உலக அளவிலும் அறிந்து கொள்கிறார்கள்.
இந்தியக் கல்வி நிறுவனங்களின் இந்த லேட்டஸ்ட் ரிப்போர்ட் கார்டை சற்று விரிவாகப் பார்ப்போம். 1. அரியணையில் ஐஐடி டெல்லி இந்திய அளவில் கடந்த சில ஆண்டுகளாகவே முதலிடத்தைப் பிடிக்க ஐஐடி டெல்லிக்கும், ஐஐடி பாம்பேக்கும் இடையே அனல் பறக்கும் போட்டி நிலவி வருகிறது. ஐஐடி டெல்லி (IIT-Delhi): தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்திய அளவில் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. உலக அளவில் 5 இடங்கள் முன்னேறி 118-வது இடத்தைப் பிடித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. ஐஐடி பாம்பே (IIT-Bombay): ஒரு காலத்தில் இந்தியப் பட்டியலில் டாப் கியரில் இருந்த இந்த நிறுவனம்,
இந்த முறை 129-லிருந்து 134-வது இடத்திற்கு சறுக்கியுள்ளது. ஐஐடி மெட்ராஸ் (IIT-Madras): நம்ம ஊர் ஐஐடி மெட்ராஸ், கடந்த ஆண்டை விட 10 இடங்கள் முன்னேறி 170-வது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது. உலக அளவில் ‘டாப் 200’ பட்டியலுக்குள் இருக்கும் மூன்றாவது இந்திய நிறுவனம் இதுவே ஆகும்.