பழனி கோவில் உண்டியல் என்னும் பணி

திண்டுக்கல், டிச. 20- உலகப்புகழ் பெற்ற முருகன் கோயில்களில் முதன்மையானதாக விளங்கும் பழனி தண்டாயுதபாணி திருக்கோயிலில், கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ரூ.4 கோடியே 8 லட்சத்து 43 ஆயிரத்து 113 பணமும், 800 கிராம் தங்கமும், 11,275 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைத்துள்ளது. சபரிமலை ஐயப்பன் சீசன், தொடர் விடுமுறைகள் உள்ளிட்ட காரணங்களால் பக்தர்கள் வருகை அதிகரித்ததே இந்த வருவாய் உயர்வுக்குக் காரணம் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. உலகப்புகழ் பெற்ற முருகன் கோயில்களில் முதன்மையான கோயில் பழனி தண்டாயுதபாணி திருக்கோயில் தான். இந்த கோயிலுக்கு தமிழகத்தை தாண்டி கேரளாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து செல்கிறார்கள். பழனிக்கு என்றே ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து தரிசனம் செய்வார்கள். குறிப்பாக பொதுவாக கார்த்திகை, மார்கழி மாதங்களில் முருக பெருமானை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். பழனி முருகன் கோவில் அந்த காலக்கட்டத்தில நிற்க கூட இடம் இல்லாத அளவிற்கு பல நாட்கள் கூட்டம் அலைமோதும். அதேநேரம் மற்ற நேரங்களில் விஷேச நாட்களில் மற்றும் வெள்ளி, செவ்வாய்கிழமைகளில், ஞாயிறுகளில் பழனி முருகன் கோயிலுக்கு கூட்டம் அதிகமாகவே இருக்கும். இந்த நிலையில் கடந்த சில தினங்களாகவே சபரிமலை ஐயப்பன் சீசன், மற்றும் கார்த்திகை மாதம் ஆகியாற்றின் காரணமாக பழனி கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருந்தது. குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பழனி முருகப் பெருமானை தரிசித்தனர்.