
பெங்களூரு: மே 20 –
பெங்களூர் சிவாஜி நகரில் உள்ள பவரிங் மருத்துவமனை வளாகத்தில் நிகழ்ந்த சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த துயரச் சம்பவம் குறித்து அரசு அமைத்த விசாரணைக் குழு தனது அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது. அதிகாரிகளின் அலட்சியமும், கட்டுமானக் கழிவுகளை அறிவியல் பூர்வமற்ற முறையில் அகற்றியதுமே இவ்விழப்பிற்கு முக்கியக் காரணம் என அந்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதி, பெங்களூருவில் பெய்த கனமழையின் போது, மருத்துவமனை வளாகத்தின் சுவர் இடிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்தனர் மற்றும் 7 பேர் காயமடைந்தனர். இச்சம்பவத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, மே 14 ஆம் தேதி, தலைமைச் செயலாளர் அவர்கள் மருத்துவமனைக்குச் சென்று அந்த இடத்தை ஆய்வு செய்தனர். விசாரணை அறிக்கையில், மருத்துவமனைக்கு அருகில் சுமார் 22 ஆயிரம் சதுர அடி பரப்பளவு இருந்தது. மழை காரணமாக அந்த சுவற்று ஓரம் இருந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அங்கே தஞ்சம் அடைந்தனர் அப்போது சுவர் இடிந்து விழுந்து இந்த விபத்து ஏற்பட்டது இது பெங்களூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முதல்வர் சித்ராமையா சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையற்றார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நபர்களை சந்தித்து ஆறுதல் கூறினார் இதேபோல் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் வந்து பார்வையிட்டனர் அது தொடர்ந்து விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது தற்போது விசாரணை கமிஷன் அறிக்கை வெளியாகி உள்ளது இதில் அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக இந்த துயர சம்பவம் நடந்து இருப்பதாக அறிக்கையில் திட்டவட்டமாக கூறப்பட்டுள்ளது.


















