பாகிஸ்தான் – சவுதி ஒப்பந்தம்: நாட்டு நலனை பாதுகாக்க மத்திய அரசு உறுதி

புதுடெல்லி: செப்.19-
நாட்​டின் பாது​காப்​புக்​காக​வும், பிராந்​திய மற்​றும் உலகளா​விய நிலைத்​தன்​மைக்​காக​வும் பாகிஸ்​தான் – சவுதி அரேபியா இடையே​யான பாது​காப்பு ஒப்​பந்​தத்​தில் உள்ள விஷ​யங்​களை​யும், அதன் தாக்​கங்​களை​யும் இந்​தியா ஆய்வு செய்​யும் என வெளி​யுறவுத்​துறை தெரி​வித்​துள்​ளது.
பாகிஸ்​தான் – சவுதி அரேபியா இடையே பரஸ்பர பாது​காப்பு ஒப்​பந்​தம் கையெழுத்​தாகி​யுள்​ளது. அதில் பாகிஸ்​தான் அல்​லது சவுதி அரேபியா மீது தாக்​குதல் நடத்​தப்​பட்​டால், அது இரு நாடு​களுக்கு எதி​ரான தாக்​குதலாக கருதப்​படும்’’ என சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்​மான் அப்​துலாசிஸ் மற்​றும் பாகிஸ்​தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோர் கூட்​டாக அளித்த பேட்டியில் தெரி​வித்​தனர். பாகிஸ்​தான் மீது இந்​தியா ஆபரேஷன் சிந்​தூர் தாக்​குதல் நடத்​திய 4 மாதங்​களுக்​குப்​பின் இந்த ஒப்பந்தம் பாகிஸ்​தான் – சவுதி அரேபியா இடையே கையெழுத்​தாகி​யுள்​ளது.இது குறித்து இந்​திய வெளி​யுறவுத்​துறை செய​லா​ளர் ரந்​திர் ஜெய்​ஸ்​வால் கூறிய​தாவது: சவுதி அரேபியா – பாகிஸ்​தான் இடையேபரஸ்பர பாது​காப்பு ஒப்​பந்​தம் கையெழுத்​தாகி​யுள்ள செய்​தியை பார்த்​தோம். இரு நாடு​கள் இடையே நீண்​ட​கால​மாக பரிசீலனை​யில் இருந்த ஒப்​பந்​தம் தற்​போது கையெழுத்​தாகி​யுள்ளதை மத்​திய அரசு அறியும்.
நாட்​டின் பாது​காப்​புக்​காக​வும், பிராந்​திய மற்​றும் உலகளாவிய நிலைத்​தன்​மைக்​காக​வும் சவுதி அரேபியா – பாகிஸ்​தான் இடையே​யான பாது​காப்பு ஒப்​பந்​தத்​தில் உள்ள விஷ​யங்​களை​யும், அதன் தாக்​கங்​களை​யும் மத்​திய அரசு ஆய்வு செய்​யும். நாட்​டின் தேசிய நலனை பாது​காப்​ப​தி​லும், நாட்​டின் விரி​வான பாது​காப்பை உறுதி செய்​வ​தி​லும் மத்​திய அரசு உறு​தி​யுடன் உள்​ளது.இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.