பாகிஸ்தான் செய்த கேவலமான அரசியல்

துபாய், செப். 29- ஆசிய கோப்பை வரலாற்றிலே ஒரு மோசமான சம்பவத்தை பாகிஸ்தான் செய்திருக்கிறது. இதன் மூலம் வெற்றி பெற்ற அணிக்கு கோப்பையை தர முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் இந்திய அணி கோப்பையில் வென்று மைதானத்தை சுற்றி வரும் காட்சியை பார்க்க வேண்டும் என்று எண்ணி காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றுமே மிஞ்சி இருக்கிறது. ஒவ்வொரு அணியும் ஒவ்வொரு தொடரில் விளையாடும்போது இறுதிப் போட்டியில் வென்று அந்த கோப்பையை தொடும் நிகழ்வுக்காக தான் விளையாடும். ஆனால் போட்டியில் வென்று அந்த கோப்பையை தரப்படவில்லை என்றால், எவ்வளவு மோசமான விஷயமாக இருக்கும். அதுதான் தற்போது இந்தியாவுக்கு நடந்திருக்கிறது. இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போர் பதற்றம் ஏற்பட்ட நிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான விரிசல் அதிகரித்து இருந்தது. இதனால் பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க உள்ளூர் மக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது. அதிலும் மீறி இந்திய அணி விளையாடினாலும் பாகிஸ்தான் வீரர்களுக்கு கைகுலுக்காமல் புறக்கணித்தது. இந்த நிலையில் ஆசியக் கோப்பை தொடரில் லீக் சுற்று சூப்பர் ஃபோர் மற்றும் இறுதி போட்டி என மூன்று முறையில் இந்தியாவை பாகிஸ்தானை வீழ்த்திருக்கிறது.