பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவு.. திருப்பூரில் 6 இளைஞர்களை கைது

திருப்பூர்: பிப்ரவரி 21-
திருப்பூரில் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வந்த 6 பேரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். வங்கதேசத்தை சேர்ந்த அவர்கள் 6 பேரும், ஊத்துக்குளி, பல்லடம் பகுதிகளில் பணியாற்றி வந்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 8 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக சில இளைஞர்கள் கருத்து பதிவிட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக டெல்லி போலீசார் விசாரித்து வந்துள்ளனர். இதில் வங்கதேசத்தை சேர்ந்த 6 இளைஞர்கள் தான் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் திருப்பூரில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து இன்று டெல்லி கியூ பிரிவு போலீசார் திருப்பூர் வந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் திருப்பூர் ஊத்துக்குளி, பல்லடம் பகுதிகளில் பணியாற்றி வந்துள்ளனர். இந்த நிலையில் டெல்லியில் இருந்து வந்த கியூ பிரிவு போலீசார் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கே சென்று 6 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். அப்போது அவர்களிடம் இருந்து 8 செல்போன்கள் மற்றும் 16 சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.