
டெல்லி, மே 27- ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, அமெரிக்க வெளியுறவு செயலர் மார்கோ ருபியோ, இந்தியா மீது மிகப்பெரிய ராணுவ தாக்குதலை பாகிஸ்தான் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தகவல்கள் கூறுவதாக தகவல் கொடுத்தார். இதற்கு இந்தியா தீர்க்கமாக பதிலளித்ததாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. இந்த ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இதில் நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பதிலடியாக இந்தியா மீது பாகிஸ்தான் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை கொண்டு தாக்க முற்பட்டது. பாகிஸ்தானின் இந்த தாக்குதலை இந்தியா தனது வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் முறியடித்தது. பாகிஸ்தான் விமான தளங்கள் மீது இந்தியா அதிரடி தாக்குதலை நடத்தியது. இந்தியாவின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்தது. இதையடுத்து, இருநாடுகளுக்கும் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக நாடாளுமன்ற ஆலோசனைக் குழு உறுப்பினர்களுக்கு, மத்திய அரசின் ராஜ்ய ரீதியிலான நடவடிக்கை மற்றும் இராணுவ நிலைப்பாடு குறித்து விளக்கினார். அப்போது, ஜெய்சங்கர் கூறியதாவது:- இந்த மாத துவக்கத்தில், சர்வதேச நாடுகள் தங்கள் கவலைகளை வெளிப்படுத்தியது. மிகப்பெரிய தாக்குதலை முன்னெடுக்க போவதாக அமெரிக்க வெளியுறவு செயலர் மார்கோ ருபியோ, இந்தியா மீது மிகப்பெரிய ராணுவ தாக்குதலை பாகிஸ்தான் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தகவல்கள் கூறுவதாக தகவல் கொடுத்தார். இதற்கு இந்தியா தீர்க்கமாக பதிலளித்தது. அதாவது, பாகிஸ்தான் மிகப்பெரிய தாக்குதலை முன்னெடுக்க முயன்றால் அதற்கு நிகரான எதிர்தாக்குதலை எதிர்கொள்ள அந்த நாடு தயாராக இருக்க வேண்டும் என்று கூறியது” என்று பேசியதாக தகவல்கள் கூறுகின்றன. அதேபோல, இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றத்தை தணிக்க மூன்றாம் தரப்பு நாடுகள் மத்தியஸ்தம் செய்ததாக வெளியான தகவலை நிராகரித்து இருக்கிறார் ஜெய்சங்கர். ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடங்குவதற்கு முன்பு பயங்கரவாதிகளையும் அவர்களின் முகாம்களையும் மட்டுமே குறிவைத்து தாக்க இருப்பதாக பாகிஸ்தானுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டதாக ஜெய்சங்கர் பேசியதாக வெளியான வீடியோ தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.