பாக். வீரர்களுக்கு ரூ.16 லட்சம் அபராதம்

கராச்சி, மார்ச் 3- டி20 உலகக் கோப்பையில் மோசமான செயல்பாட்டால் பாகிஸ்தான் வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் முன்​னாள் சாம்​பிய​னான பாகிஸ்​தான் அணி அரை இறுதிக்கு முன்​னேறும் வாய்ப்பை இழந்​தது. லீக் சுற்​றில் இந்​திய அணி​யிடம் தோல்வி அடைந்த பாகிஸ்தான் அணி சூப்​பர் 8 சுற்​றில் இங்​கிலாந்​திடம் வீழ்ந்திருந்​தது. மேலும் அந்த அணி நியூஸிலாந்​துடன் மோத இருந்த ஆட்​டம் மழை காரணமாக ரத்தாகியிருந்தது. இதனால் நிகர ரன் ரேட் விகிதத்​தில் சிக்கிய பாகிஸ்​தான் அணி கடைசி ஆட்​டத்​தில் இலங்கை அணியை வீழ்த்​திய போதி​லும் தொடரில் இருந்து வெளியேறியது. இந்​நிலை​யில் இந்​தத் தொடரில் பாகிஸ்​தான் அணி வீரர்களின் செயல் திறன் எதிர்​பார்த்த அளவுக்கு இல்லாததால் கடும் விமர்​சனங்​கள் எழுந்​துள்​ளன. பாகிஸ்தான் அணி​யின் முன்​னாள் வீரர்​கள் பலரும் கேள்வி​கணை​களை தொடுத்து வரு​கின்​றனர். வீரர்​களின் செயல்​திறன் வாரி​யத்தை மட்​டுமல்ல, அரசாங்கத்​தில் உள்ள செல்​வாக்கு மிக்க நபர்​களை​யும் வருத்​தப்​படுத்​தி​யுள்​ளது என்று பாகிஸ்​தான் கிரிக்​கெட் வட்​டாரங்​கள் தெரிவிக்​கின்​றன. இந்​நிலை​யில் உலகக்​கோப்பை தொடரில் விளை​யாடிய பாகிஸ்​தான் அணி வீரர்​களுக்கு அந்​நாட்டு கிரிக்​கெட் வாரி​யம் அபராதம் விதித்​துள்​ள​தாக தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன. அணியில் உள்ள ஒவ்​வொரு வீரருக்​கும் இந்​திய மதிப்​பில் சுமார் ரூ.16.28 லட்​சம் அபராதம் வி​திக்கப்பட் டுள்​ள​தாக கூறப்​படுகிறது.