
வேலூர்: டிசம்பர் 6-
பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று சனிக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.. விமான நிலையங்கள், பேருந்து நிலையங்கள், மார்க்கெட்டுகள், கோயில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், வணிக வளாகங்கள் என மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.. தமிழகத்தின் முக்கியமான இடங்களில் மெட்டல் டிடெக்டர் மூலம் அனைவரும் சோதனை செய்யப்படுகிறார்கள்.
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளான டிசம்பர் 6ம் தேதி ஆண்டுதோறும் சில முஸ்லிம் இயக்கத்தினர் போராட்டங்கள் நடத்த வருகிறார்கள்.
இதன் காரணமாக தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.. அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் மாநிலம் முழுவதும் சில நாட்களாகவே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வந்த நிலையில், இன்று உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதிலும் டெல்லியில் சமீபத்தில் கார் குண்டுவெடிப்பு சம்பவம், நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலையை உண்டுபண்ணியதால், இந்த வருட பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு இந்தியா முழுவதுமே பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் தமிழ்நாட்டில் பாதுகாப்பு உஷார் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னையில் 15000 போலீசார் உள்பட தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் இன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பஸ் ஸ்டாண்டுகள், ரயில்வே ஸ்டேஷன்கள், வழிப்பாட்டு தலங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். கோயம்பேடு மார்க்கெட், பேருந்து நிலையம், பாரிமுனை, தியாகராய நகர், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், பெரியமேடு, உள்ளிட்ட குறிப்பிட்ட பகுதிகளில் போன்ற பகுதிகள் தீவிரமாக கண்காணிப்படுகிறது.
அதேபோல, ரயில்களில் பயணிகளின் உடைமைகள் சோதனைக்கு பிறகே ரயில் நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்… இன்று ரெயில் தண்டவாளம், முக்கிய பாலம் பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பணியில் ஈடுபட உள்ளனர்.. சென்னை முழுவதும் நேற்றிரவு முதல் விடிய விடிய வாகன சோதனையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர்.. ஸ்டார் ஓட்டல்கள், லாட்ஜ்கள், ரிசார்ட்களிலும் போலீசார் சோதனை நடத்தி, சந்தேகத்துக்குரிய நபர்கள் தங்கி இருக்கிறார்களா? என்பதை ஆய்வு செய்தபடி உள்ளனர். ராமேஸ்வரத்தில் பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய துப்பாக்கியுடன் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
இரவில் முக்கியமான சாலை சந்திப்புகள், உட்பட மக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களில் ஆயுதம் ஏந்திய போலீசார் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.. விமான நிலையங்களுக்கு வரும் அனைவரும் முழுமையான பரிசோதனைக்குப் பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். திருச்சி, வேலூர், கோவை என முக்கிய நகரங்களிலும் கண்காணிப்புகள் விரிவடைந்துள்ளன. விழுப்புரத்திலும் மோப்ப நாய் ராணி உதவியுடன், விழுப்புரம் ரயில் நிலையம், புதிய பஸ் நிலையம் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், வாகன நிறுத்துமிடங்கள், வழிபாட்டுத் தலங்களில், மெட்டல் டிடெக்டர் உதவியுடன் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
















