பாம்பை மருத்துவமனைக்கு சென்ற வாலிபர்

கோவூர்: மார்ச் 3
ஆந்திரா மாநிலம், நெல்லூர் மாவட்டம், கோவூர் புறநகர் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் நேற்று மதியம் அங்குள்ள ஓட்டலில் சாப்பிட்டார். அப்போது
ஓட்டலுக்குள் நுழைந்த நல்ல பாம்பு ஒன்று வாலிபரை கடித்தது. இதனைக் கண்ட வாலிபர் பாம்பை பிடித்து அடித்து கொன்றார்.
பின்னர் இறந்த பாம்பை தூக்கிக் கொண்டு கோவூர் அரசு மருத்துவமனைக்கு சென்றார். வாலிபர் பாம்புடன் மருத்துவமனைக்கு வந்ததைக் கண்டமருத்துவமனை ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் அதிர்ச்சி அடைந்து மருத்துவமனையிலிருந்து ஓட்டம் பிடித்தனர்.
வாலிபர் பாம்பு இறந்து விட்டதாக கூறிய பின்னர் டாக்டர்கள் வாலிபருக்கு சிகிச்சை அளித்தனர். அவரை மேல் சிகிச்சைக்காக நெல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
டாக்டர்கள் வாலிபருக்கு சிகிச்சை அளித்தனர்