
டெல்லி: டிசம்பர் 1-
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற குளிர் கால கூட்ட தொடர் இன்று தொடங்கியுள்ளது. எஸ்ஐஆர் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதனால், மக்களவையை 12 மணி வரை சபாநாயகர் ஓம்பிர்லா ஒத்திவைத்தார்.
நாடே உற்று நோக்கிய பீகார் சட்டமன்ற தேர்தலில் நிதிஷ் – பாஜக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது. அடுத்ததாக தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில் 2026 ஆம் வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிளும் தீவிரமாக பணியாற்ற தொடங்கிவிட்டனர்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்ட தொடர் ஏற்கனவே பீகார் தேர்தலில் வாக்காளர் பட்டியல் சிறப்பு பணி பெரும் சர்ச்சையை கிளப்பியது. 66 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருந்தனர். தற்போது தமிழ்நாடு, மேற்கு வங்கம் மாநிலங்களில் எஸ்ஐஆர் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். திமுக, காங்கிரஸ், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று (டிசம்பர் 1 ஆம் தேதி) தொடங்கியது. இன்று தொடங்கி வருகிற 19 ஆம் தேதி வரை கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத் தொடரில் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கார்ப்பரேட் சட்டத்திருத்த மசோதா, தேசிய நெடுஞ்சாலை திருத்த மசோதா, அணுசக்தி மசோதா, உயர் கல்வி ஆணையம் அமைப்பது உள்ளிட்ட சில மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளது.
எதிர்க்கட்சிகள் அமளி எஸ்ஐஆர் விவகாரம் குறித்து விவாதிக்க கோரிஎதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இருக்கைகளில் அமர்ந்தபடி முழுக்கம் எழுப்பினர். எதிர்க்கட்சிகளின் அமளி தொட்ரந்ததால் மக்களவையை 12 மணி வரை சபாநாயகர் ஒத்திவைத்தார்.

















