பார்லியில் சிங்கமென கர்ஜித்த மோடி

புதுடில்லி: ஆகஸ்ட் 1-
சிந்து நதி, பல நூற்றாண்டுகளாக இந்தியாவின் அடையாளமாக இருந்தது. அதனாலேயே, அதாவது சிந்து நதியின் பெயராலேயே இந்தியா என்று அறியப்பட்டது. ஆனால் நேருவும் காங்கிரஸும் இங்கிருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து மற்றும் ஜீலம் நதிகள் குறித்த முடிவுகள் எடுக்கும் அதிகாரத்தை யாருக்கு கொடுத்தார்கள்?உலக வங்கிக்கு கொடுத்தார்கள்.
சிந்து நதி நம்முடையது. அதில் ஓடும் நீர் நமக்கு சொந்தமானது. அதில் உலக வங்கிக்கு என்ன வேலை? பாகிஸ்தானும் சிந்து நதியின் நீருக்கு உரிமை கொண்டாடு வதால், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பஞ்சாயத்து செய்ய உலக வங்கிக்கு உரிமை கொடுத்தார் நேரு. அதற்காக அவர் போட்ட ஒப்பந்தம் இந்தியாவின் பெருமைக்கும் எதிராக செய்யப்பட்ட மிகப்பெரிய துரோகம்.
‘’சிந்து ஒப்பந்தம் பின்னணி என்ன என்று தெரிந்தால் நம் இளைஞர்கள் அதிர்ச்சி, வியப்பில் மூழ்கி விடுவார்கள்.