
பாட்னா, நவ. 4- பிஹாரில் முதல்கட்ட சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. இதன் காரணமாக தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் மகா கூட்டணியின் தலைவர்கள் இன்று தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர். 243 தொகுதிகளைக் கொண்ட பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நவம்பர் 6 மற்றும் 11-ம் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் நவம்பர் 6-ல் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 18 மாவட்டங்களில் உள்ள 121 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இன்று மாலை 5 மணியுடன் பிரச்சாரம் முடிவடைகிறது. இந்தச் சூழலில், வாக்காளர்களை கவரும் வகையில் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் மகா கூட்டணியின் தலைவர்கள் இன்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர்.
















