பிரான்ஸ் நாட்டு போலி விசா விநியோகம்: குற்றவாளி கைது

புதுடெல்லி: ​டிசம்பர் 3-
கடந்த அக்​டோபர் 28-ம் தேதி பிரான்ஸின் பாரிஸ் நகருக்கு செல்ல தமிழ்நாட்​டில் இருந்து 3 பேர் டெல்​லி​யில் உள்ள இந்​திரா காந்தி சர்​வ​தேச விமான நிலை​யத்​துக்கு வந்​தனர்.நவி​ராஜ் சுப்​பிரமணி​யம், மோகன் காந்தி இளங்​கோவன், பிர​பாகரன் செந்​தில்​கு​மார் ஆகிய மூவரும் விசா சோதனை கவுன்ட்​டருக்கு வந்​த​போது அவர்​களின் ‘டி’ வகை விசா போலி​யானது எனத் தெரிய​வந்​தது.
இதையடுத்து விமான நிலைய காவல் நிலை​யத்​தில் பாஸ்​போர்ட் மற்​றும் விசா சட்​டங்​களின் கீழ் வழக்​கு​கள் பதிவு செய்​யப்​பட்டு மூவரும் கைது செய்​யப்​பட்​டனர்.விசா​ரணை​யில், நவி​ராஜ் ரூ.6 லட்​சம் கொடுத்​தும் மற்ற இரு​வரும் தலா ரு.12 லட்​சம் அளித்​தும் இந்த விசாக்​களை தமிழ்​நாட்​டின் நாமக்​கல்லை சேர்ந்த வி.கண்​ணன் என்​பவரிடம் இருந்து பெற்​றது தெரிய​வந்​தது.
இதையடுத்து டெல்லி போலீ​ஸார் கண்​ணனை கைது செய்​து, டெல்​லிக்கு அழைத்து வந்​துள்​ளனர். விசா​ரணை​யில் இது​வரை 16 இளைஞர்​களை கண்​ணன் ஏமாற்றி இருப்​பது தெரிய​வந்​தது. இவருக்கு உடந்​தை​யாக இருந்த தமிழ்​நாட்டை சேர்ந்த அப்​துல் ஹக்​கீம் என்​கிற சாதிக் சையத் தலைமறை​வாகி விட்​டார். இவரை தமிழ்​நாடு போலீ​ஸாருடன் இணைந்து டெல்லி போலீ​ஸார் தேடி வரு​கின்​றனர்.
டெல்லி போலீ​ஸாரிடம் கண்​ணன் அளித்த தகவல்​களின்​படி, அவர் பரமத்​தி​யில் அரசு அங்​கீ​காரம் பெற்ற ஐடிஐ நடத்தி வரு​கிறார். இத்​துடன், வெற்றி ஓவர்​சீஸ் என்ற பெயரில் வெளி​நாட்டு கல்வி ஆலோ​சனை நிறு​வன​மும் நடத்​துகிறார். இவர் தனது கூட்​டாளி​யுடன் சேர்ந்​து, பாரிஸ் நகரின் சர்​வ​தேச பெருநிறுவன கிடங்​கு​களில் வேலை வாங்​கித் தரு​வ​தாக வாக்​குறுதி அளித்து வந்​துள்​ளார்.
பல்​வேறு நாடு​களுக்கு போலி விசா அளிக்​கும் மோசடி டெல்​லி​யில் சமீப நாட்​களாக அதி​கரித்​துள்​ளது. இது தொடர்​பான தகவலின் பேரில் கடந்த மாதம் டெல்​லி​யில் போலீ​ஸார் சோதனை நடத்​தினர். இதில் 6 மோசடி முகவர்​கள் உட்பட 26 பேரை கைது செய்​தனர்.