லண்டன், ஆகஸ்ட் 5- இப்போது உலகின் முக்கிய நாடுகளில் ஒன்றாகச் சீனா உருவெடுத்துள்ளது. அதேநேரம் சீனா திரைமறைவிலும் பல காரியங்களைச் சத்தமில்லாமல் செய்து வருகின்றன. அப்படியொரு சம்பவம் குறித்த தகவல் தான் இப்போது வெளியாகியுள்ளது.
பிரிட்டனில் கல்வி நிறுவனங்களில் சீனா உளவு பார்ப்பதாக இப்போது ஒரு பரபர ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் படிப்பிற்காகப் பலரும் பல்வேறு நாடுகளுக்குச் செல்கிறார்கள். நமது நாட்டு மாணவர்கள் போலவே சீன மாணவர்களும் தங்கள் படிப்பிற்காகப் பல உலக நாடுகளுக்குச் செல்கிறார்கள். அப்படி சீன மாணவர்கள் அதிகம் செல்லும் நாடுகளில் ஒன்றாகப் பிரிட்டன் இருக்கிறது. இதற்கிடையே UKCT எனப்படும் இங்கிலாந்து-சீனா வெளிப்படைத்தன்மை அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை இப்போது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. பிரிட்டிஷ் பல்கலைக்கழகங்களில் சீன அரசுடன் தொடர்புடைய நடவடிக்கைகள் குறித்து அந்த அறிக்கையில் உள்ள பாயிண்டுகள் பேசுபொருள் ஆகியுள்ளது.



















