பி.வி.சிந்து தேர்வு

புதுடெல்லி, டிச. 26- உலக பாட்​மிண்​டன் சம்​மேளனம் (பிடபிள்​யூஎப்) சார்பில் செயல்​படும் விளை​யாட்டு வீரர்​கள் ஆணை​யத்​தின் தலை​வ​ராக இந்​திய பாட்​மிண்​டன் வீராங்​கனை பி.வி.சிந்து தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளார். இவர் 2026ம் ஆண்டு முதல் 2029ம் ஆண்டு வரை இந்​தப் பதவியை வகிப்​பார் என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. இதற்​கான அறி​விப்பு நேற்று வெளி​யாகி​யுள்​ளது. இந்த ஆணை​யத்​தில் உறுப்​பின​ராக இந்​திய வீராங்​கனை பி.​வி.சிந்து கடந்த 2017ம் ஆண்டு முதல் பதவி வகித்து வரு​கிறார். மேலும், 2020ம் ஆண்டு முதல் உலக பாட்மிண்​டன் சம்​மேளன ஒருங்​கிணைந்த தூத​ராக​வும் அவர் பணி​யாற்றி வரு​கிறார்.