புதிய டிஜிபியை தேர்வு செய்வதில் இழுபறி

சென்னை: ஆகஸ்ட் 5-
தமிழக காவல் துறை​யின் தலைமை டிஜிபி​யான சங்​கர் ஜிவால் ஆக. 31-ம் தேதி​யுடன் பணி ஓய்வு பெறுகிறார். இதையடுத்​து, புதிய டிஜிபி யார் என்ற எதிர்​பார்ப்பு எழுந்​துள்​ளது.சீனி​யாரிட்டி அடிப்​படை​யில் 1990-ல் தேர்​வாகி தற்​போது டிஜிபிக்களாக உள்ள தீயணைப்​புத் துறை இயக்​குநர் சீமா அகர்​வால், 1992-ல் தேர்​வான ஆவின் விஜிலன்ஸ் டிஜிபி ராஜீவ்​கு​மார், அதே ஆண்​டில் தேர்​வான காவல் உயர் பயிற்​சியக டிஜிபி சந்​தீப் ராய் ரத்​தோர் முறையே முதல் 3 இடங்​களில் உள்​ளனர்.
அடுத்தடுத்த இடங்​களில் டிஜிபிக்​களான அபய்​கு​மார் சிங், வன்​னியபெரு​மாள், மகேஷ்கு​மார் அகர்​வால், வெங்​கட்​ராமன், வினித்​தேவ் வான்​கடே உள்​ளனர்.
காலி​யாக உள்ள 3 மாதங்​களுக்கு முன்​னரே தமிழக அரசு அடுத்த தகு​தி​யான 8 பேரின் பட்​டியலை மத்​திய அரசு பணி​யாளர் தேர்​வாணை​யத்​துக்கு அனுப்​பிவைக்​கும். அதில், எந்த குற்​றச்​சாட்​டு​களுக்​கும் உள்​ளா​காத சீனி​யாரிட்டி மற்​றும் தகு​தி​யின் அடிப்​படை​யில் முதல் 3 இடங்​களில் உள்​ளோரின் பட்​டியலை மத்​திய அரசு பணி​யாளர் தேர்​வாணை​யம் தமிழக அரசுக்கு மீண்​டும் அனுப்பி வைக்​கும். அதில், ஒரு​வரை தேர்வு செய்து தமிழக அரசு புதிய சட்​டம் ஒழுங்கு டிஜிபி​யாக நியமிக்​கும்.
இது​தான் நடை​முறை.இந்​நிலை​யில், ஆக. 31-ம் தேதி​யுடன் டிஜிபி சங்​கர் ஜிவால் பணி ஓய்வு பெற உள்ள நிலை​யில், புதிய டிஜிபியை தேர்வு செய்​வதற்​கான 8 பேர் பட்​டியலை தமிழக அரசு இது​வரை மத்​திய அரசு பணி​யாளர் தேர்​வாணை​யத்​துக்கு அனுப்பி வைக்​க​வில்லை என கூறப்​படு​கிறது