
மும்பை, டிச. 25- இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் மெக்குல்லம் அதிரடியாக நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பாரம்பரியமிக்க ஆசஸ் டெஸ்ட் தொடரை வெறும் 11 நாட்களில் இங்கிலாந்து அணி இழந்துவிட்டது.மேலும் ஆஸ்திரேலியாவில் இந்த தொடரை 3- 0 என்ற கணக்கில் வென்றிருக்கிறது. கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெறவே அதிக வாய்ப்பு இருக்கிறது. இங்கிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடுகிறேன் என்ற பெயரில் விக்கெட்டுகளை இழந்து வருவது பல்வேறு விமர்சனங்களை பெற்றிருக்கிறது. இந்த புதிய முறைக்கு பாஸ்பால் என்று அழைக்கப்படுகிறது. இந்த புதிய யுத்தியை கையாண்ட பிறகு இங்கிலாந்து அணி டெஸ்ட் போட்டிகளில் ஆரம்பத்தில் வெற்றியை பெற்றது. முதல் 11 போட்டிகளில் இங்கிலாந்து அணி 10 ஆட்டங்களில் வெற்றி பெற்றது.
இதனால் இந்த புதிய முறை ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. ஆனால் அதன் பிறகு இங்கிலாந்து அணி தடுமாறி வருகிறது. இந்த புதிய முறை காரணமாகவே இங்கிலாந்து அணி பல போட்டிகளில் தோல்வியை தழுவியது. அடுத்த 33 டெஸ்ட் போட்டிகளில் 16 ஆட்டங்களில் இங்கிலாந்து அணி தோல்வியை தழுவியது. இந்த முறையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் டெஸ்ட் கிரிக்கெட்டை, டெஸ்ட் கிரிக்கெட் போல் விளையாடுங்கள் என்று பலரும் வலியுறுத்தி வரும் நிலையில் இங்கிலாந்து அணி கேட்பதாக இல்லை. Advertisement Powered by: 01:08 0:13 இதனால் ஆசஸ் தொடருக்கு பிறகு இங்கிலாந்து அணியின் பயிற்சியாளரான மெக்குல்லம் நீக்கப்படலாம் என தெரிகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் இங்கிலாந்து அணி வீரர் மாண்டி பனேசர், ஆஸ்திரேலியாவை வீழ்த்துவதற்கான வழி யாருக்குத் தெரியும் என்பதை நீங்கள் யோசிக்க வேண்டும். ஆஸ்திரேலியாவின் பலவீனத்தை அறிந்த ஒருவருக்கு தான் இந்த பதவி கிடைக்க வேண்டும். என்னைக் கேட்டால் இங்கிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரவி சாஸ்திரியை நியமிக்க வேண்டும். ரவி சாஸ்திரி தலைமையில் ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு முறை அல்ல இரண்டு முறை இந்திய அணி வெற்றி பெற்று இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார். பெரும்பாலும் பெரிய அணிகளின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர்கள் சென்றது கிடையாது. இதனை ரவி சாஸ்திரி மாற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


















