
சென்னை: மே 13-
அதிமுக பிளவுப்பட்டுள்ளது. அதில் ஒரு பிரிவினரின் வீட்டிற்கு புதிய சோஃபா செல்கிறது. அதன் பின்னாலேயே புதிய முதல்வரான விஜய்யும் செல்கிறார், தவெக மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தனர்.
முதல்வர் விஜய் கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் மீது உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “புதிதாக அமைந்த ஆட்சியின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கிறது. அதற்கு முன்பு வாக்கெடுப்பு தொடங்கி 10 நாட்களாக ஒவ்வொரு நாளும் என்னென்ன நடந்தது என்பதை நான் எதிர்க்கட்சியாக கருத்துகளை முன்வைக்கிறேன்.
தமிழகத்தில் மொத்தம் பதிவான வாக்குகள் 4 கோடியே 93 லட்சத்து 25 ஆயிரம் பேர் வாக்களித்துள்ளனர். அதில் தவெகவுக்கு 1 கோடியே 72 லட்சத்து 26 ஆயிரம் பேர்தான் வாக்களித்துள்ளனர். இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் அரசுக்கு எதிராக 3 கோடியே 21 லட்சம் பேர் வாக்களித்தனர். இதன் மூலம் தவெகவுக்கு 65 சதவீதம் பேர் நிராகரித்துள்ளனர். உங்கள் மீது உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கே நம்பிக்கை குறைந்துவிட்டது.



















