புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு போதைப்பொருள் விநியோகம் 6 பேர் கைது

பெங்களூரு, ஜன.1-
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு போதை பொருள் சப்ளை செய்ய முயன்ற ஆறு பேரை போலீசார் பல்வேறு ஸ்டேஷன்களில் கைது செய்துள்ளனர்.
இவர்கள் வசம் இருந்து ரூ. 12.70 லட்சம் மதிப்பிலான போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அம்ரூத்ஹள்ளி வர்மா லே வீட்டில் உள்ள காலி இடத்தில் போதை மருந்து எம்டிஎம்ஏ விற்பனை செய்வதாக தெரிய வந்தது. கேரளாவை சேர்ந்த ஷாஜி முத்துண்ணி (24) என்பவரை அம்ரூத்ஹள்ளி போலீசார் கைது செய்தனர். குற்றவாளிகள் இடம் இருந்து ரூ.8.5 லட்சம் மதிப்புள்ள 85 கிராம் எம்டிஎம்ஏ போதை பொருள் கைப்பற்றப்பட்டது.
பெங்களூரில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கேரளாவில் இருந்து போதை பொருள் கொண்டு வந்து விற்பனை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
நைஜீரியா நாட்டவரிடமிருந்து போதை பருள் வாங்கி அதிக விலைக்கு விற்றதாக அத்தில் (28) அல்தாப் கான் (25) ஆகியவரை ஜெ.ஜெ. நகர் போலீசார் கைது செய்தனர்.
குற்றவாளிடம் இருந்து 42 ஆயிரம் மதிப்புள்ள 20 கிராம் எம்டிஎம்ஏ மற்றும் பல்வேறு போதைப் பொருட்களை கைப்பற்றப்பட்டன. குற்றசாட்டப்பட்டவர்கள் பழைய குட்டஹள்ளி முக்கிய சாலையில் அருகே உள்ள மயான பகுதியில் காலியான இடத்தில் போதை பருள் விற்பனை செய்ததாக போலீசாருக்கு தெரிய வந்து அவர்களை கைது செய்தனர்.
இரு மாணவர்கள் கைது:
போதைப் பொருள் விற்பனை செய்து வந்த ஐடிஐ மாணவர்கள் முகமது ஷபி (24) அகிலேஷ் (24) ஆகியோரை கைது செய்யப்பட்டனர்.
குற்றவாளிகளிடம் இடமிருந்து 28 ஆயிரம் மதிப்புள்ள 14 கிராம் எம்டிஎம்ஏ போதைப்பொருள் கைப்பற்றதாக போலீசார் தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் கேரளாவில் இருந்து பெங்களூருக்கு போதை பொருள் கொண்டு வந்து மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்தனர் .
காரில் எம் டி எம் ஏ கிறிஸ்டல் என்ற போதைப் பொருள் விற்பனை செய்த அகமதுவை கொடிகே ஹள்ளி போலீசார் கைது செய்தனர்.