பெங்களூரில் பால் திருட்டு அதிகரிப்பு

பெங்களூரு, ஏப்ரல் 12 –
பால் விலை உயர்வைத் தொடர்ந்து, பெங்களூர் நகரில் பால் திருடர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. காமாக்ஷிபாளையா அருகே ஒரு நபர் பால் திருடிவிட்டு பைக்கில் தப்பிச் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
காமாக்ஷிபாளைய காவல் நிலையத்திற்கு உட்பட்ட நந்தினி விற்பனை நிலையத்தில் பால் பாக்கெட்டுகள் திருடப்பட்டது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அ
திகாலையில் பால் பெட்டிகளை இறக்கிய சில நிமிடங்களில் திருடர்கள் பாலை திருடிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
பால் திருட்டு தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருவதால், திருடர்கள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.