பெங்களூரில் 10 நாட்கள் தமிழ்ப் புத்தகத் திருவிழா தொடக்கம்

பெங்களூர், நவ. 6:
கர்நாடக தமிழ் பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் 4வது ஆண்டு தமிழ் புத்தக திருவிழா இன்று தொடங்கி வரும் 14 ம் தேதி வரை டாக்டர் அம்பேத்கர் வீதியில் உள்ள தி இன்ஸ்டிட்யூட் ஆப் என்ஜினியர்ஸ வளாகத்தில் நடைபெறுகிறது .
இதன் தொடக்க விழா வெள்ளிக்கிழமை (நவ. 5) மாலை பெங்களூரு குடிநீர் வாரிய தலைவர் டாக்டர் ராம் பிரசாத் மனோகர் தலைமையில் நடைபெற்றது.
திருவிழாவை இந்திய விண்வெளி ஆய்வு மையம் தலைவர் டாக்டர் வி. நாராயணன் குத்து விளக்கு ஏற்றி தொடக்கி வைத்தார். இலெமூரியா அறக்கட்டளை நிறுவன தலைவர் குமணராசன், அரிமா சங்க தலைவர் மோகன், வாசன் கண் மருத்துவமனை நிறுவனர் ஹர்ஷவர்தன், இயக்குனர் சுந்தரமுருகேசன், மதுசூதனபாபு, கோ. மணிவாசகம், ராஜகோபால் பாலாஜி, தி. கோ. தாமோதரன், புலவர் கார்த்தியாயினி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். திருவிழாவை துவக்கி வைத்து நாராயணன் பேசும் போது, கர்நாடக மாநில தமிழ் பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் தமிழ் புத்தக திருவிழா நடத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது. மக்களிடம் வாசிப்பு தன்மை குறைந்து வரும் காலத்தில் இது போன்ற விழா நடத்துவது சால சிறந்தது. மக்கள் தாய் மொழி பேசும் போது, அதை படிக்கவும் வேண்டும்.


இன்றைய அறிவியல் வளர்ச்சியில் கல்வி இன்றியமையாத ஒன்றாகும். இளைஞர்கள், மாணவர்கள் கல்வியில் ஆர்வம் காட்ட வேண்டும் என்றார்.
பெங்களூர் குடிநீர் வடிகால் வாரியத் தலைவர் டாக்டர் வி இராம் பிரசாத் மனோகர் பேசியது: பெங்களூரில் தமிழ் புத்தகத் திருவிழா நடத்துவதற்கு நான் எந்த உதவியும் செய்யவில்லை. என்னுடைய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த தமிழ் அன்னைக்கு சேவை செய்வதற்காக இறைவன் எனக்கு அளித்த வாய்ப்பாக இதை கருதுகிறேன்.
எனவே பெங்களூரில் நடைபெறும் ஒவ்வொரு புத்தகத் திருவிழாவிலும் தவறாமல் கலந்து கொள்வேன் அதுபோல் புத்தகத் திருவிழாவிற்கு உறுதுணையாக இருக்கிற அனைத்து உள்ளங்களையும் வாழ்த்துகிறேன்.
அவர்களுக்கு நன்றி கூறுகிறேன். ஆனா முதல் புத்தகத் திருவிழா ஊற்று போல் இருந்தது தற்போது அது நதியாக வளர்ந்து வருகிறது. இனி வரும் காலங்களில் கடலாக மாறிவிடும்.
இந்த தமிழ் புத்தகத் திருவிழாவின் நோக்கம் தமிழர்களின் வாழ்க்கையை மேம்பாடு அடையச் செய்ய வேண்டும் என்பது தான்.தமிழ் சமுதாயம் மேம்பட வேண்டுமென்றால் அதற்கு கல்வி முக்கியம். கல்வி கற்றால் அனைத்து வளர்ச்சிகளும் அனைத்து வளர்ச்சிகளும் தானாக வந்துவிடும் என்றார். நிகழ்வில் திமுகவைச் சேர்ந்த ந. ராமசாமி, திகவைச் சேர்ந்த ஜானகிராமன், முல்லைக்கோ, ராமச்சந்திரன், தனம் வேளாங்கன்னி, பன்முகன், திருநாவுக்கரசு, கோ கருணாநிதி, சிவசங்கரன், ராஜசேகரன், கபிலன் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.