பெங்களூர் தமிழ் புத்தகத் திருவிழாவில் தமிழர் தொன்மை குறித்து ஆய்வரங்கம்

பெங்களூர் டிசம்பர் 21
பெங்களூரில் இன்று தமிழ் புத்தகத் திருவிழா இரண்டாவது நாளாக நடந்தது.
புத்தக திருவிழாவின் இரண்டாம் நாளான இன்று காலை 10 மணிக்கு பள்ளி மாணவர்கள் பங் கேற்கும் தமிழ் மொழி திறன் போட்டிகள் நடந்தது பேராசிரியர் வி.தமிழ்ச் செல்வன்வரவேற்றார். ஓய்வு பெற்ற சுங்கத்துறை இயக்குனர் கோ.மாணிக்க வாசகம் தலைமையில் நடக் கும் போட்டியை மேற்கு வங்க மாநில அரசின் முன் னாள் கூடுதல் தலைமை செயலாளர் கோ.பாலச்சந் திரன் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். எஸ்விசிகே பள்ளி நிறுவனர் த.லட்சுமிபதி, லிட்டர் ராபின் உயர்நிலை பள்ளி நிறுவனர் அ.வரதராஜன், சிறுமலர் பள்ளி நிறுவனர் அ.மதுசூதானபாபு, தாகூர் பங்கேற்றனர் பகல் 2 மணி முதல் 3 மணி வரை வெற்றி அரங் கத்தில் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடக்கிறது. ஆசிரியர் மஞ்சுளா வரவேற் கிறார். சந்திரசேகர் தலை மையில் நடக்கும் விழாவில் நம்ம ஊர் தமிழ் மக்கள் குழுவை சேர்ந்த த.கோவலன் பரிசுகள் வழங்குகிறார். மாலை 5 மணி முதல் 6 மணி வரை பாராட்டரங்கம் நடக்கிறது. இதில் சிறந்த தமிழ் நூல்களுக்கு பரிசு வழங்கப்படுகிறது. பேராசிரி யர் சரஸ்வதி வரவேற்கிறார். பேராசிரியர் பொன்.க.சுப்பி ரமணியன் தலைமை வகிக் கிறார்.கர்நாடக மாநில
மூத்த ஐஏஎஸ் அதிகாரியும் மாநில அரசின் தொழில் துறை முதன்மை செயலா ளருமான டாக்டர் எஸ். செல்வகுமார் பரிசு வழங்கி சிறப்புரை ஆற்றுகிறார்.
மாலை 6 மணிக்கு தொல்லியல் ஆய்வுகள் வெளிப்படுத்தும் தமிழர் தொன்மை என்ற தலைப்பில் ஆய்வரங்கம் நடக்கிறது. பொறியாளர் நித்யகல்யாணி வரவேற்கிறார். கர்நாடக மூத்த ஐபிஎஸ் அதிகாரி யும் கூடுதல் போலீஸ் டிஜிபியுமான எஸ்.முருகன் தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சியில் தொல்லியல் ஆய்வறிஞர் அமர்நாத் இராமகிருஷ்ணன் உரை யாற்றுகிறார். முடிவில் புல வர் கார்த்தியாயிணி நன்றி கூறுகிறார்.