
சண்டிகர், ஆகஸ்ட் 29- ‘’ஹரியானாவில், ‘தீன் தயாள் லடோ லட்சுமி’ திட்டத்தின் கீழ், செப்., 25 முதல்,
பெண்களுக்கு மாதம், 2,100 ரூபாய் வழங்கப்படும்,’’ என, அம்மாநில முதல்வர் நயாப் சிங் சைனி தெரிவித்துள்ளார்.ஹரியானாவில் முதல்வர் நயாப் சிங் சைனி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இங்கு 2024 அக்டோபரில் நடந்த சட்டசபை தேர்தலின் போது, ‘பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வந்தால், பெண்களுக்கு மாதம், 2,100 ரூபாய் வழங்கப்படும்’ என வாக்குறுதி அளித்திருந்தது.உதவித்தொகை அக்கட்சி ஆட்சி அமைத்து ஓராண்டாக உள்ள நிலையில், இந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடிவு செய்துள்ளது.இது தொடர்பாக, முதல்வர் நயாப் சிங் சைனி தலைமையில் நேற்று அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
கூட்டத்துக்கு பின், முதல்வர் நயாப் சிங் சைனி கூறியதாவது: ’தீன் தயாள் லடோ லட்சுமி’ திட்டத்தின் கீழ், செப்., 25 முதல், 23 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதம், 2,100 ரூபாய் வழங்கப்படும். திருமணமானவர்களுக்கும், திருமணமாகாதவர்களுக்கும் உதவித்தொகை வழங்கப்படும். முதற்கட்டமாக, ஆண்டு வருமானம் 1 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக உள்ள குடும்பங்களைச் சேர்க்க முடிவு செய்துள்ளோம். 15 ஆண்டுகள் இதன் மூலம், 20 லட்சம் பெண்கள் பயனடைவர். பின், படிப்படியாக இத்திட்டத்தை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளோம். இத்திட்டத்தின் பலனை பெற, திருமணமாகாத பெண் அல்லது திருமணமானவராக இருந்தால், அவரது கணவர், 15 ஆண்டுகள் ஹரியானாவில் வசித்திருக்க வேண்டும்.
ஒரு குடும்பத்தில் மூன்று பெண்கள் தகுதியுடையவர்களாக இருந்தால், மூவரும் மாதம், 2,100 ரூபாய் பெறுவர். தகுதியுள்ள பெண்களின் பட்டியல் அனைத்து பஞ்சாயத்துகள் மற்றும் வார்டுகளிலும் வெளியிடப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.