பெண் பேராசிரியை பரபரப்பு புகார்

பெங்களூர்: டிச.18-
திருமண வாழ்க்கையில் கணவன் மனைவி இடையே எப்போதுமே நெருக்கமாக இருப்பது தான் சிறப்பானதாக பார்க்கப்படுகிறது. என்ன தான் வேலை, குழந்தைகள், கடமைகள், பொறுப்புகள், பிரச்சனைகள் இருந்தாலும் கணவன் மனைவி இடையே காதல் குறையாமல் இருந்தால் அது இனிமையான வாழ்க்கையாக இருக்கும். ஆனால் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் அதுஇருப்பது இல்லை. அதேநேரம் பெங்களூரில் விசித்திரமான தர்மசங்கடமான புகாரை போலீசார் எதிர்கொண்டனர்.
கணவன் மனைவி இடையே ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் நெருக்கம் குறைந்துவிடும். தோளுக்கு மேல் பிள்ளைகள் வளர்ந்தால், நெருக்கம் இருக்காது.. அதேநேரம் கணவன் மனைவியிடம் நெருக்கத்தை எதிர்பார்க்கும் போது சிக்கல் ஏற்படுகிறது. அப்படித்தான் பெங்களூரில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
கர்நாடகா மாநிலம் பெங்களூர் கோவிந்தராஜ் நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் 67 வயது ஓய்வு பெற்ற பேராசிரியை. இவர் கர்நாடகா மாநிலம் முழுவதும் பல்வேறு கல்லூரிகளில் முதல்வராகவும் இருந்திருக்கிறார். இவரது கணவருக்கு 70 வயது ஆகிறது. இந்த தம்பதி 1983-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இல்லற வாழ்க்கையில் இணைந்தே பயணித்த இந்த முதிய தம்பதிக்குள் தற்போது கசப்பான சம்பவங்கள் தாம்பத்தியம் காரணமாகவே நடந்தது.அதாவது பேராசிரியை, அவரது 2 மகன்களுக்கும், கணவருக்கும் இடையே சொத்து தகராறு ஏற்பட்டிருக்கிறது, 8 நாட்களுக்குள் தனது வீட்டை காலி செய்யும்படி அவர் வக்கீல் நோட்டீஸ் கொடுத்து கெடு விதித்திருக்கிறார். இந்த நிலையில் அந்த பேராசிரியை தனது கணவர் மீது கோவிந்தராஜ் நகர் போலீசில் விசித்திரமான புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில் பேராசிரியை கூறுகையில், எனக்கும், கணவருக்கும் கல்யாணம் ஆகி 42 ஆண்டுகள் ஆகிறது. 1993-ம் அண்டு அவர் தனது வேலையில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பிறகு அவர் பெரும்பாலும் முழுக்க முழுக்க எனது சம்பாத்தியத்தில் வாழ்ந்து வந்தார். என்னடைய சம்பளத்தை அவர் துஷ்பிரயோகம் செய்து வந்தார். கடந்த நவம்பர் 22-ந்தேதி நான் வீட்டை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வந்தேன்.
அப்போது என்னை கட்டாயப்படுத்தி ஒரு அறைக்குள் இழுத்துச் சென்றார். அங்கு வைத்து என்னிடம் வலுக்கட்டாயமாக அத்துமீறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போது அவர் எனது கழுத்தை நெரித்ததுடன், கொலை மிரட்டலும் விடுத்தார். அத்துடன் 2 மகன்களையும் கொன்றுவிடுவதாகவும் அவர் மிரட்டினார். எனது கணவரின் தொடர் சித்ரவதையால் எனது வீட்டில் கண்காணிப்பு கேமராக்களை மகன்கள் பொருத்தி உள்ளார்கள். அதில், இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் அனைத்தும் பதிவாகி உள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படியும் அவர் கூறியிருந்தார். அதன்பேரில் கோவிந்தராஜ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். புகாருக்கு ஆளானவர் 70 வயது முதியவர் என்பதால் போலீசார் அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்கள்.