பெரிய விஷயமே இல்லை.. பும்ரா குறித்து கவாஸ்கர் அதிரடி

துபாய், செப்டம்பர் 6- 2025 ஆசியக் கோப்பை டி20 தொடரில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சுத் தாக்குதலை ஜஸ்பிரித் பும்ரா வழிநடத்த உள்ளார். கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட கடுமையான முதுகுவலி காயம் காரணமாக, அவரது கிரிக்கெட் எதிர்காலம் குறித்த கவலைகள் எழுந்தன. இதையடுத்து, அவரது பணிச்சுமை மிகவும் கவனமாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில், ஆசியக் கோப்பையில் பும்ராவின் ஆசியக் கோப்பை பங்களிப்பு குறித்து பலவிதமான விவாதங்கள் எழுந்தன. இந்நிலையில், இதுகுறித்து தனது கருத்தைத் தெரிவித்த முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், பும்ராவின் பணிச்சுமை குறித்துக் கவலைப்படத் தேவையில்லை என்று கூறியுள்ளார். நான்கு ஓவர்கள் மட்டுமே வீசுவதால் பிரச்சனையில்லை சுனில் கவாஸ்கர் இதுகுறித்து கூறுகையில், “இந்த ஆசியக் கோப்பையில், ஒரு போட்டிக்கு நான்கு ஓவர்கள் மட்டுமே பந்துவீச வேண்டும். அதுவும் தொடர்ச்சியாக நான்கு ஓவர்கள் வீசப்போவதில்லை. எனவே,
இந்தத் தொடரில் விளையாடுவது அவருக்கு எந்தப் பிரச்சினையையும் ஏற்படுத்தும் என்று நான் நினைக்கவில்லை.” “நிச்சயமாக அவருக்குப் பணிச்சுமை பிரச்சினை இருக்காது, ஏனெனில் அவர் நான்கு ஓவர்கள் மட்டுமே வீச வேண்டும். அதனால் எந்தப் பிரச்சனையும் வர வாய்ப்பில்லை” என்று தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.கடந்த ஜனவரி மாதம் பும்ராவிற்கு ஏற்பட்ட காயத்திற்குப் பிறகு, அவரது உடற்தகுதி தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இங்கிலாந்துக்கு எதிரான ஆண்டர்சன்-டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் தொடரில், இரண்டு போட்டிகளில் அவருக்கு ஓய்வளிக்கப்பட்டது. அணியின் இந்த முடிவு சில விமர்சனங்களுக்கு உள்ளானாலும், பும்ராவின் உடலுக்கு அதிக அழுத்தம் கொடுக்காமல் இருப்பதே இதன் நோக்கமாக இருந்தது. சிறந்த பந்துவீச்சு குழு மேலும், ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியின் பந்துவீச்சுக் குழு குறித்தும் கவாஸ்கர் தனது கருத்தைப் பகிர்ந்து கொண்டார். பும்ராவுடன் மேலும் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களைச் சேர்க்க வேண்டும் என்று அவர் யோசனை தெரிவித்துள்ளார். அக்சர் படேல் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் ஆல்-ரவுண்டர்களாக அணிக்கு பலம் சேர்ப்பார்கள் என்றும், குல்தீப் யாதவ் ஒரே ஒரு சிறப்பு சுழற்பந்து வீச்சாளராக இருக்க வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார். இது குறித்து கவாஸ்கர் கூறுகையில், “எனது கணிப்புப்படி, பேட்டிங்கை 8-ம் நிலை வரை நீட்டிக்காமல், பந்துவீச்சாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.