பைரபி – சாய்ரங் புதிய ரயில் பாதை

புதுடெல்லி: செப் 2-
மிசோரம் தலைநகர் ஐஸ்வாலை இணைக்கும் பைரபி – சாய்ரங் வரையிலான 51.38 கிமீ தொலைவுக்கு புதிய ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடி செப்.13-ம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடகிழக்கு மாநிலங்​களின் மாற்​றத்​துக்கு இந்​திய ரயில்வே குறிப்​பிடத்​தக்க பங்​களிப்பை வழங்கி வரு​கிறது. இத்​தகைய திட்​டங்​களில் வடகிழக்கு மாநில​மான மிசோரம் தலைநகரை இணைக்​கும் பைரபி – சாய்​ராங் புதிய பாதை ரயில் திட்​ட​மும் ஒன்​றாகும். மிசோரம் மாநிலம் மியான்​மர், வங்​கதேசம் ஆகிய நாடு​களு​ட​னும் திரிபு​ரா, அஸ்​ஸாம், மணிப்​பூர் ஆகிய மாநிலங்​களு​டனும் எல்​லையை பகிர்ந்து கொள்​கிறது.
இங்கு கடந்த 2014-ம் ஆண்டு வரை அஸ்​ஸாம் எல்​லை​யில் இருந்து சுமார் 5 கிமீ தொலை​வில் உள்ள பைரபிக்கு மட்​டுமே ரயில் பாதை அமைக்​கப்​பட்டு இருந்​தது. இதனால் சாலை மார்க்​கத்​தில் செல்ல பெரும் தொகை செல​விடும் நிலை இருந்து வந்​தது. இதையடுத்​து, ரயில் போக்​கு​வரத்தை ஏற்​படுத்​தும் வகை​யில், ரூ.8,071 கோடி​யில் 51.38 கிமீ நீளத்​தில் ரயில் பாதை அமைப்​ப​தற்​கான திட்​டம் கடந்த 2008-ல் அறிவிக்​கப்​பட்​டது. முதல்​கட்ட பணி​கள் நிறைவடைந்​து, பிர​தான பணி​கள் 2014-ல் தொடங்​கப்​பட்​டன. இந்த புதிய ரயில் பாதை, தலைநகர் ஐஸ்​வாலை அஸ்​ஸாமில் உள்ள சில்​சா​ருடன் இணைக்​கும் வகை​யில் அமைக்​கப்​பட்​டது.
நாட்​டின் வேறு எந்த ரயில் பாதை​யும் கொண்​டிருக்​காத வகை​யில் 48 சுரங்​கங்​கள், 55 பெரிய பாலங்​கள், 87 சிறிய பாலங்​கள் வழி​யாக ரயில் பாதை அமைக்​கப்​பட்​டுள்​ளது. மேலும், குராங் ஆற்​றின் மீது, 371 மீ நீள​மும், 114 மீ உயர​மும் கொண்ட நாட்​டின் இரண்​டாவது உயர்ந்த ரயில் பால​மாக அமைக்​கப்​பட்​டுள்​ளது. இது குதுப் மினாரை விட 42 மீ உயரம் அதி​கம் என்​பது குறிப்​பிடத்​தக்​கது. ஜம்மு காஷ்மீரின் செனாப் பாலமே உலகள​வில் முதலா​வது உயர​மான பால​மாகும்.