Home மாவட்டங்கள் பெங்களூர் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நிரந்தர தீர்வு: அதிகாரிகளுக்கு ஐகோர்ட் உத்தரவு

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நிரந்தர தீர்வு: அதிகாரிகளுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஜூலை 3-
சென்னை உயர் நீதி​மன்​றம் எதிரே உள்ள ஆர்​மீனியன் தெரு மற்​றும் தம்பு செட்டி தெரு​வில் நில​வும் போக்​கு​வரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காணும் வகை​யில், போக்​கு​வரத்து போலீ​ஸாரும், மாநக​ராட்சி அதி​காரி​களும் இணைந்து நடவடிக்கை எடுக்க, உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்​தர​விட்​டுள்​ளது.
இதுதொடர்​பாக, உயர் நீதி​மன்​றத்​தில் வழக்​கறிஞர் எஸ்​.நட​ராஜன் தாக்​கல் செய்​திருந்த பொதுநல மனு: சென்னை உயர் நீதி​மன்​றத்​துக்கு எதிரே உள்ள தம்பு செட்டி தெரு, ஆர்​மீனியன் தெரு எனப்​படும் அரண்​மனைக்​காரன் தெரு உள்​ளிட்ட பகு​தி​களில் ஏராள​மான வழக்​கறிஞர்​களின் அலு​வல​கங்​கள் உள்​ளன. குறிப்​பாக, ஆர்​மீனியன் தெரு​வில் புனித அந்​தோணி​யார் தேவால​யம், கோயில்​கள், தனி​யார் பள்​ளி​கள், ஓட்​டல்​கள் என வணிக நிறு​வனங்​கள் அதி​க​மாக இயங்கி வரு​கின்​றன.
இதே​போல, தம்​புசெட்​டித் தெரு​வில் வங்​கி​கள் உள்​ளிட்ட வணிக நிறு​வனங்​கள் இயங்கி வரு​கின்​றன. ஆர்​மீனியன் தெரு​வில் உள்ள புனித அந்​தோணி​யார் தேவால​யத்​துக்கு தின​மும் ஏராள​மான பக்​தர்​கள் வந்து செல்​கின்​றனர்.
அதே​போல, இப்​பகு​தி​யில் உள்ள பள்​ளி​யில் சுமார் ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட மாணவ, மாண​வியர் பயின்று வரு​வ​தால் தின​மும் காலை முதல் மாலை வரை இப்​பகு​தி​களில் கடும் போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​படு​கிறது.
முறை​யான திட்​ட​மிடல் இல்​லாத​தால் பொது​மக்​கள் நடந்து செல்​வதற்கு கூட வழி​யின்றி நெரிசல் குறை​யும் வரை காத்​திருக்க வேண்​டி​யுள்​ளது. அவசர நேரங்​களில் இந்த இரு தெருக்​களி​லும் ஆம்​புலன்ஸ் உள்​ளிட்ட எந்த வாக​ன​மும் செல்ல முடி​யாத அளவுக்கு சாலை​யின் இரு​புறங்​களி​லும் வாக​னங்​கள் நிறுத்தி வைக்​கப்​பட்​டுள்​ளன.
எனவே, இந்த இரு சாலைகளில் ஏற்​படும் போக்​கு​வரத்து நெரிசலுக்கு தீர்வு காணக்​கோரி ஏற்​க​னவே, சென்னை மாநகர காவல் ஆணை​யர் மற்​றும் பூக்​கடை உதவி ஆணை​யர், காவல் ஆய்​வாளர் மற்​றும் போக்​கு​வரத்து போலீ​ஸாருக்கு கடந்​தாண்டு ஆக.7 அன்று புகார் அளித்​தும் எந்த நடவடிக்​கை​யும் எடுக்​கப்​பட​வில்லை இவ்​வாறு மனு​வில் குறிப்​பிட்​டிருந்​தார்.