போராட்ட அறிவிப்பு எதிரொலி: ஊக்கத் தொகை உயர்வு

புதுடெல்லி, ஜன. 1- தெலங்​கானா கிக்- பிளாட்ஃ​பார்ம் தொழிலா​ளர் சங்கம் (டிஜிபிடபிள்​யூ​யு) மற்​றும் இந்​திய செயலி அடிப்படையி​லான போக்கு​வரத்து தொழிலா​ளர் கூட்​டமைப்பு (ஐஎப்​ஏடி) ஆகியவை ஊதிய உயர்​வு, மேம்​பட்ட வேலை நிலை​மை​களைக் உறுதி செய்யக்​கோரி நேற்று நாடு தழு​விய வேலை நிறுத்​தத்​துக்கு அழைப்பு விடுத்​திருந்​தது. இதில், ஆயிரக்​கணக்​கான தொழிலாளர்கள் பங்​கேற்​றனர். வேலை நிறுத்​தம் குறித்து தொழிற்​சங்க தலை​வர்​கள் கூறுகையில், “முந்​தைய ஊதிய முறையை மீண்​டும் அமல்படுத்துதல், 10 நிமிட டெலிவரி மாதிரி​களைத் திரும்​பப் பெறு​தல், தன்னிச்​சை​யான கணக்கு முடக்​கங்​களில் ​இருந்து பாது​காப்​பு, ஊதிய அமைப்​பு​களில் வெளிப்​படைத்​தன்​மை, காப்​பீடு, நலத்திட்டங்​கள் உள்​ளிட்ட சமூகப் பாது​காப்​புப் பலன்​களை வழங்க கோரி இந்த போ​ராட்​டம் நடை​பெறுகிறது” என்​றனர். தொழில்​துறை வட்​டாரங்​களின்​படி, புத்​தாண்டு தினத்​தன்று தேவை உச்​சத்​தில் இருக்​கும் நேரத்​தில், இந்த வேலை நிறுத்​தம் சோமாட்டோ, ஸ்விக்​கி, பிளிங்​கிட், இன்​ஸ்​டா​மார்ட் மற்​றும் ஜெப்டோ போன்ற உணவு விநி​யோகம் மற்​றும் விரைவு வர்த்தக நிறு​வனங்​களின் செயல்​பாடு​களைப் பாதிக்​கக்​கூடும் என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.