மகன்களால் கைவிடப்பட்ட வயதான பெற்றோர் தற்கொலை

ஹாசன்: பிப்ரவரி 23-
பெற்று வளர்த்து ஆளாக்கிய பிள்ளைகள் கைவிட்டதால் வயதான பெற்றோர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர் இந்த துயர சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது.
குடகு மாவட்டம் சோம்புவார்பேட்டை தாலுகாவில் உள்ள
ஹரேஹோசூர் கிராமத்தைச் சேர்ந்த டேனியல் என்பவர் 50 ஆண்டுகளுக்கு முன்பு மேரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நெல்சன் மற்றும் வில்சன் என்ற இரண்டு மகன்கள் இருந்தனர். டேனியல் கடுமையாக உழைத்து ஹரேஹோசூரில் ஒரு காபி தோட்டம் மற்றும் ஒரு வீடு உட்பட ஒரு சொத்தை கட்டி, தனது இரண்டு மகன்களை கரை சேர்த்து திருமணம் செய்து வைத்தார்
நெல்சன் பெங்களூரில் வேலை செய்து கொண்டிருந்தபோது, ​​மற்றொரு மகன் வில்சன் ஹரேஹோசூரில் ஒரு காபி தோட்டத்தை கவனித்து வந்தார்.
எந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இந்த இரண்டு மகன்களும் தம்பை பெற்று வளர்த்து ஆளாக்கிய பெற்றோரை புறக்கணிக்க தொடங்கினர். அவர்களுக்கு உணவு வழங்குவதில்லை எப்போதும் திட்டிக்கொண்டே இருப்பது என்று பெற்றோரை சித்திரவதை செய்ய தொடங்கி இருக்கின்றனர் இந்த நிலையில் தனது தாய் தந்தை இருவரும் நோய்வாய்ப்பட்டு உள்ளனர். தாயும் தந்தையும் நோயால் துடிப்பதை கண்டு மருத்துவமனைக்கு கூட அழைத்துச் செல்லாமல் மகன்கள் அவர்களை கைவிட்டனர். இந்த நிலையில் மனமுடைந்த பெற்றோர் வீட்டை விட்டு வெளியேறி ஒரு முதியோர் இல்லத்தில் சில காலம் தங்கி இருந்தனர். ஆனால் கடுமையாக உழைத்து நன்றாக சொத்து சேர்த்து பிள்ளைகளைப் படிக்க வைத்து வாழ்ந்த இவர்களால் முதியோர் இல்லத்தில் நீண்ட நாட்கள் தங்கி இருக்க முடியவில்லை. எனவே முதியோர் இல்லத்தை விட்டு வெளியேறி வருகை இருந்த ரயில் தண்டவாளத்தில் போய் படுத்து கொண்டனர். இதில் ரயில் மோதி இருவரும் பரிதாபமாக பலியானார்கள். இது குறித்து கல் நெஞ்சம் கொண்ட அவர்களின் இரண்டு மகன்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் வந்து தங்கள் பெற்றோரின் உடல்களை பெற்றுச் செல்ல மறுத்துவிட்டனர். பின்னர் ரயில்வே போலீசார் அந்த இரண்டு மிருகங்களையும் அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி விஷயத்தை கூறினர். பின்னர் நீதிபதி உத்தரவின் பேரில் பெற்றோரின் உடல்களை எடுத்துச் செல்ல அந்த வில்சன் நெல்சன் என்ற இரண்டு மனித மிருகங்கள் வந்தது. சவக்கிடங்கில் இருந்த தனது பெற்றோரான டேனியல் மற்றும் மேரியின் உடல்களை பார்த்து இரண்டு மகன்களும் ஒரு சொட்டு கண்ணீர் கூட சிந்தாமல் சிலை போல் நின்றிருந்ததை பார்த்து அங்கிருந்து மக்கள் தூ இப்படிப்பட்ட ஜென்மங்களா என்று காரி துப்பினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது