
சபரிமலை: ஜனவரி 5-
‘’சபரிமலையில் ஜன. 14 மகரஜோதி நாளில் பம்பையில் இருந்து 900 அரசு பஸ்கள் இயக்கப்படும்,’’ என, கேரள போக்குவரத்து துறை அமைச்சர் கணேஷ் குமார் தெரிவித்தார்.
கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலில், மகரஜோதி முன்னேற்பாடுகள் தொடர்பாக பம்பையில் நேற்று உயரதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. அமைச்சர் கணேஷ்குமார் பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.
பின்னர் அவர் கூறிய தாவது:
நடப்பு சீசனில் கேரள அரசு போக்குவரத்து கழகத்தின் ஏற்பாடுகள் சிறப்பாக இருந்ததாக பக்தர்கள் தெரிவித்தனர். ஒரு விபத்து கூட நடைபெறவி ல்லை என்பது மகிழ்ச்சியான விஷயம். அடுத்த சீச னில் கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்படும்.
மகரஜோதி நாளில் பம்பையில் இருந்து நீண்டதுார ஊர்கள் மற்றும் நிலக்கல்லுக்கு, 900 பஸ்கள் இயக்கப்படும். தேவைப்பட்டால் மேலும் 100 பஸ்கள் தயார் நிலையில் பக்கத்து மாவட்ட டிப்போக்களில் நிறுத்தப்பட்டிருக்கும். பம்பை ஹில்டாப் பார்க்கிங்கில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு அங்கு பஸ்கள் நிறுத்தப்பட்டிருக்கும். தேவைக்கேற்ப பம்பை பஸ் ஸ்டாண் டிற்கு வரவழைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.















