மசூதி மூடப்பட்ட விவகாரம்:மாணவர்கள் இடையே மோதல் அபாயம்

புதுடெல்லி: பிப்ரவரி 27-
உத்​தர பிரதேச தலைநகர் லக்​னோவில், லக்னோ பல்கலைக்​ கழகம் செயல்​படுகிறது. இதனுள் நசிரு​தீன் ஹைதர் என்​பவ​ரால் 1,800-ம் ஆண்​டு கட்​டப்​பட்டலால் பாரா​தாரி எனும் கட்டிடம் உள்​ளது. இதனை மசூ​தி​யாக கருதி பல்​கலைக்​கழக முஸ்லிம் மாணவர்​கள் இதனுள் தொழுகை நடத்தி வருகின்றனர்.
இக்​கட்​டிடம் இடி​யும் நிலை​யில் இருப்​ப​தாக கூறி கடந்த பிப்​ர​வரி 23-ல் லக்னோ மாநக​ராட்​சி​யால் மூடப்​பட்​டது. அதே பல்​கலை​யில் உள்ள மற்​றொரு மசூ​தி​யில் தொழுகை நடத்​திக் கொள்​ளும்​படி அறி​வுறுத்​தப்​பட்​டது. இதை எதிர்த்து முஸ்​லிம் மாணவர்​கள் பல்கலை வளாகத்​தில் ஆர்ப்​பாட்​டம் நடத்​தினர்.
தடையை மீறி தொழுகை நடத்​திய 13 மாணவர்​கள் மீது பொது அமை​திக்கு பங்​கம் விளை​வித்​த​தாக வழக்​குப் பதி​வானது. இதனால் முஸ்​லிம் மாணவர்​கள் மறு​நாள் போராட்​டத்தை வலுப்படுத்​தினர். இவர்​களுக்கு எதி​ராக பல்​கலை.​யின் பஜ்ரங்​தளம் உள்ளிட்ட இந்​துத்​துவா ஆதரவு மாணவர்​கள் போராட்​டக் குரல் எழுப்​பினர்.
இதனால் இரு தரப்பு மாணவர்​கள் இடையே மோதல் சூழல் உருவானது. மூன்​றாவது நாளான நேற்​று, மீண்​டும் மூடப்​பட்ட மசூதி​யின் தடுப்​பு​களை மீறி தொழுகை நடத்​தப்​பட்​டது. இதற்கு சமாஜ்​வா​தி, காங்​கிரஸ் மற்​றும் இடது​சா​ரி​களின் மாணவர் அமைப்​பு​களை சேர்ந்​தவர்​கள் மனித சங்​கிலி அரண் அமைத்து பாது​காப்பு அளித்​தனர். இதனால், லக்னோ பல்​கலை வளாகத்​தில் பதற்​றம் அதி​கரித்து வரு​கிறது. வளாகத்​தின் உள்​ளே​யும் வெளி​யே​யும் பாது​காப்பு அதிகரிக்​கப்​பட்​டுள்​ளது. நிலை​மையை போலீ​ஸார் தொடர்ந்து கண்​காணித்து வரு​கின்​றனர். மசூதி மூடலுக்கு எதி​ரான மாணவர்களின் போராட்​டத்​துக்கு லக்னோ அரசி​யல் தலைவர்களும் ஆதர​வளிக்க தொடங்​கி​யுள்​ளனர்.