மனிதர்களுக்கு மனிதநேயம் வேண்டும்: இயக்குநர் கே.பாக்யராஜ்

பெங்களூரு, டிச.13:
மனிதர்களுக்கு மனிதநேயம் வேண்டும் என்று திரைப்பட நடிகர், கதாதிரியர், இயக்குநர் கே.பாக்யராஜ் தெரிவித்தார். பெங்களூரில் டிச. 5 ஆம் தேதி தொடங்கி, 14 ஆம் தேதி வரை கர்நாடக பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில் தமிழ்ப் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. வெள்ளிக்கிழமை (டிச. 12) ஆம் தேதி மாலை சிந்தனை களம் நிகழ்ச்சி பெங்களூரு தமிழ் சங்க முன்னாள் தலைவர் தி. கோ. தாமோதரன் தலைமையில் நடைபெற்ற‌து. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திரைப்பட நடிகர், கதாதிரியர், இயக்குநர் கே.பாக்யராஜ் பேசுகையில், லியோ டால்ஸ்டாய் அவர்களை மகாத்மா காந்தி சந்தித்து பேசும் போது, நான் நல்ல புத்தகம் படிக்க வேண்டும். என்ன புத்தகம் படிக்கலாம் என்று கேட்டபோது. நீங்கள் என்ன சொல்கிறீர்கள். உங்கள் நாட்டில் உலகத்திற்கு வழி காட்டும் புத்தகம் இருக்கும் போது, என்னை கேட்பது என்ன நியாயம் என்றார். அதைப் கேட்ட மகாத்மா காந்தி, எங்கள் நாட்டில் அப்படி என்ன புத்தகம் உள்ளது என்று காந்தி கேட்டபோது, உங்கள் நாட்டில் உள்ள‌ தமிழ் நாட்டில் திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் உள்ளது. அது உலகத்திற்கும் மனித குலத்தின் மீட்சிக்கும் தேவையான அறம், பொருள், இன்பம் என்ற தத்துவம் உள்ளது என்றார். அதை கேட்டபின் மகாத்மா காந்தி, திருக்குறளை படித்தார். நான் என் வாழ்க்கையில் புனிதமாக நினைப்பது கடவுளையே, மற்றவர்களையோ அல்ல. பள்ளியில் பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்களை மட்டுமே. அவர்கள் தான் எதிர்கால சமூகத்தை உருவாக்கும் சிற்பிகள். வகுப்பறையில் பாடல் நடத்தும் போது, பல வழிகளில் பொறுமையாக சொல்லி கொடுத்து உருவாக்குகிறார்கள். அவர்கள் தான் உண்மையான கடவுள்கள் என்பதில் உறுதியாக உள்ளேன். ஒரு மீனவர் கடலுக்கு சென்று மீன் பிடிக்க வலை விரித்தார். வலையில் கனமான ஒன்று சிக்கியது. இழுக்கும் போது, வலையில் சுறா மீன் இருந்தது. அதை அவர் இழுக்க, அது அவரை இழுத்தது. ஆனால் அதை விடாமல் இழுத்தார். காரணம் சுறா மீனுக்கு கடலுக்கு மீண்டும் செல்ல எப்படி லட்சியம் இருந்ததோ, அதே லட்சியம் அதை இழுக்க வேண்டும் என்ற லட்சியத்தில் உறுதியாக அந்த மீனவரும் இருந்தார். இது போல் தான் ஒவ்வொரு வரும் வாழ்க்கையில் லட்சியத்துடன் வாழ வேண்டும். நான் திரையுலகில் கால் பதித்த போது பல இன்னல்கள், அவமானங்களை சந்தித்ததேன். அப்போது மீனவரின் லட்சியம் என் நினைவுக்கு வந்தது. கடலில் மீனவர் உறுதியாக இருந்தது போல், நானும் திரையுலகில் வெற்றி பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து ஜெயித்தேன். வாழ்க்கையில் கல்வி மட்டுமே நம்மை மேம்படுத்த முடியும். ஆகவே கல்வியில் கவனம் செலுத்த வேண்டும். ஆசிரியர்கள் சொல்லி கொடுப்பதை கேட்டு நடக்க வேண்டும். மேலும் எவ்வளவு புத்தகங்கள் படிக்கிறோமோ அவ்வளவு அறிவு வளர்ச்சி கிடைக்கும். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் புத்தகங்கள் படிக்க வேண்டும். புத்தகங்கள் படித்தால் மட்டுமே உலகத்தை தெரிந்துக்கொள்ள முடியும். அதேபோல் படிக்கும் போது ஆசிரியர்களிடம் தெரிந்து கொள்ள வேண்டும். அது தான் உங்கள் வாழ்க்கையை செம்மைப்படுத்தும். படிக்கும் காலத்தில் நாம் தெரிந்து கொள்ளலாமல் தவிர்த்தால் வாழ்க்கை சீரழிந்து விடும். இதற்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கக்கூடாது. அதே சமயத்தில் படித்து பட்டம் வாங்கிய பின் அந்த மமதையில் இருக்கக்கூடாது. எவ்வளவு படித்து உயரத்திற்கு சென்றாலும் மனிதர்களை மதிக்க வேண்டும். இது வாழ்க்கை புதிய ஏற்றத்தை கொடுக்கும். மேலும் நாம் யாரை சந்தித்தாலும் அவரிடம் ஏதாவது தெரிந்து கொள்ள முடியும் என்ற மனபக்குவம் பெற வேண்டும். மனிதன் வாழ்க்கையில் எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் மனிதநேய இருக்க வேண்டும். புரட்சித் தலைவர் எம்ஜிஆரிடம் அந்த மனிதநேயம் இருந்த காரணத்தால், மறைந்து 38 ஆண்டுகள் கடந்தும் மக்கள் மனங்களில் வாழ்ந்து வருகிறார். மனிதர்கள் மனித நேயத்துடன் வாழ வேண்டும். மனித நேரம் இருந்தால்தான் அவர்கள் எப்போதும் மதிக்கப்படுவார்கள் என்றார். முன்னதாக புத்தக திருவிழாவில் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற கவிதை, கேள்விக்கென்ன பதில் மற்றும் நடன போட்டிகள் நடைபெற்றன. புத்தக திருவிழாவில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற கவிதை, கேள்விக்கென்ன பதில் மற்றும் நடன போட்டிகள் நடைபெற்றது. இதில் மகாராணி, அப்சரா மற்றும் விவேகானந்தா ஆகிய கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இறுதியில் கவிதை போட்டியில் முதல் பரிசு சுமார் (மகாராணி கல்லூரி), இரண்டாம் பரிசு மீனாட்சி (அப்சரா கல்லூரி), மூன்றாம் பரிசு மா. நிவேதா (விவேகானந்தர் கல்லூரி) பெற்றனர். கேள்விக்கென்ன பதில் போட்டியில் முதல் மற்றும் இரண்டாம் பரிசு விவேகானந்தா கல்லூரி, மூன்றாம் பரிசு மகாராணி கல்லூரி மாணவர்கள் பெற்றனர். நடன போட்டியில் முதல் பரிசு விவேகானந்தா கல்லூரி, இரண்டாம் பரிசு அப்சரா கல்லூரி மாணவர்கள் பெற்றனர். புத்தகத் திருவிழாவில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற கவிதை, கேள்விக்கென்ன பதில் மற்றும் நடன போட்டிகள் நடைபெற்றது. இதில் மகாராணி, அப்சரா மற்றும் விவேகானந்தா ஆகிய கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. ஆர் என் ஆர் அறக்கட்டளை தலைவர் ராஜசேகர், நிர்வாகிகள் நாகமணி அம்மாள், ராஜ்மோகன், தன சீலன், நித்திய கல்யாணி, பெங்களூரு மாவட்ட சுகாதார விழிப்புணர்வு அதிகாரி ரேவண்ணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கிய‌ முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் பேத்தியும், வழக்கறிஞருமான நாகூர் ரோஜா பேசுகையில்: மாணவர்கள் தங்கள் வாழ்வில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியம் கொள்ள வேண்டும். மனதை தெளிவாக வைத்துக் கொள்ள வேண்டும். புத்தகங்கள் கையில் வைத்துக் படித்த காலம் மாறி தற்போது டிஜிட்டல் முறையில் படிக்கும் காலம் வந்துள்ளது. என்னதான் டிஜிட்டல் வசதியில் படித்தாலும் புத்தகம் கையில் வைத்துக் படிப்பதில் கிடைக்கும் திருப்தி கிடைக்காது. கர்நாடக தமிழ் பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் புத்தக திருவிழா நடத்துவது நமக்கு கிடைத்த வர பிரசாதம். இதை தமிழ் மக்கள், மாணவர், இளைஞர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். மாணவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். மனதும், அறிவும் ஒரே நிலையில் வைத்து கொள்ள வேண்டும். பகுத்தறிவு சிந்தனை, நேர்மறையான சிந்தனை இருக்க வேண்டும். நாம் படைத்த ஏஐ போன்ற விஷயங்கள் நம்மை ஆளக்கூடாது. இயற்கை மீறி ஒரு சக்தி உள்ளது. அது கடவுளாக இருக்கலாம் அல்லது அறிவியலாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும் மனிதனை அவைகள் ஆளக்கூடாது. மனிதன் அவைகளை ஆள வேண்டும். நெருப்பு சிறியதாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும் அதன் மூலம் தீ பரவும். அதுபோலவே மனிதர்கள் தங்களை சிறுமையாக நினைக்காமல் உயர்ந்த சிந்தனையுடன் நினைக்க வேண்டும். உங்களால் முடியாது என்று எதுவும் கிடையாது. எதையும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை ஒவ்வொரு மாணவர்கள் உள்ளத்தில் இருக்க வேண்டும் என்றார்.