மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப முயற்சி: இஸ்ரோ முன்னாள் தலைவர் தகவல்

கோத்தகிரி: பிப்ரவரி 16-
நீல​கிரி மாவட்​டம் கோத்​தகிரி​யில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் பங்​கேற்ற இஸ்ரோ முன்​னாள் தலை​வரும், விண்வெளி ஆணை​யத்​தின் உறுப்​பினரு​மான ஏ.எஸ்​. கிரன்​கு​மார் பேசி​ய​தாவது: நம் நாட்​டில் விண்வெளி தொழில்​நுட்​பத்தை ஒளிபரப்​பு, தொலைத்​தொடர்​பு, வானிலை கண்​காணிப்​பு, திசை அறிதல், வியூகப் பயன்​பாடு உட்​பட்ட தேவை​களுக்கு தொடக்க காலத்​தில் பயன்​படுத்​தினோம்.
அதனைத் தொடர்ந்து வானிலை ஆய்வு மூலம் பல்​வேறு துறை​களுக்கு தகவல் அளித்​து, பயிர் விளைச்​சல், வளர்ச்சி ஆகிய​வற்றை கண்​காணிக்க இந்த தொழில் நுட்​பம் பயன்​படுத்​தப்​பட்​டது.
அண்மைக் காலங்​களில் எல்லை தாண்டி என்ன நடக்​கிறது என்​கிற தகவல்​களை இந்​திய அரசுக்கு வழங்க விண்வெளி தொழில்​நுட்​பம் பயன்​படுத்​தப்​படு​கிறது. செயற்​கைக்​கோள்​களை தொடர்ந்து விண்​ணில் செலுத்​தி, பல்​வேறு பிரச்​சினை​களுக்கு தீர்​வைப் பெற்று வரு​கிறோம்.
தற்​போது விண்வெளி தொழில்​நுட்​பத்​தில் பிற நாடு​களுக்கு இணை​யாக நம் நாடு வளர்ந்​துள்ள நிலை​யில், மனிதர்​களை விண்வெளிக்கு அனுப்​பும் முயற்​சி​யில் ஈடு​பட்டு வரு​கிறோம். இதற்​காக, தனி​யார் நிறு​வனங்​களின் பங்​களிப்​புடன் வின்​வெளி பொருளா​தா​ரத்தை மேம்​படுத்த நடவடிக்கை மேற்​கொண்​டுள்​ளது.
ஐஐடி மற்​றும் தனி​யார் கல்வி நிறு​வனங்​கள் வானியல், விண்வெளி தொழில்​நுட்​பம் தொடர்​பான கல்​வியை அளித்து வரு​கின்​றன. திறனை வளர்த்​துக் கொண்​டால் மட்​டுமே நமது நாட்டை உலகம் அங்​கீகரிக்​கும். அந்த வகை​யில் ராணுவம் உள்​ளிட்ட துறை​களில் தற்​சார்பு நிலையை அடைய இந்​தியா முனைப்பு காட்​டு​கிறது. இவ்​வாறு அவர் கூறி​னார்.