மனைவி புகார் – கணவர் கைது

பெங்களூரு, டிச. 17:
நான்கரை வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக தந்தை மீது ராமமூர்த்திநகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் 41 வயதுடைய தந்தை கைது செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.
தம்பதி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதையடுத்து, நீதிமன்ற உத்தரவுப்படி ஞாயிற்றுக்கிழமை தோறும் மனைவி தனது இரு குழந்தைகளையும் கணவர் வீட்டுக்கு அனுப்பி வைப்பது வழக்கம்.
டிச. 15 ஆம் தேதி காலை 11 மணியளவில் கணவர் வீட்டுக்கு அனுப்பிவிட்டு 2 மணியளவில் வீட்டுக்கு அழைத்துச் செல்லும் போது மகள் அழுது கொண்டிருந்தாள்.
இதுகுறித்து கணவரிடம் விசாரித்தபோது, அவர் எதுவும் பேசாமல் சென்று விட்டார். என் மகள் விளையாடிக் கொண்டிருந்தபோது விழுந்திருக்கலாம் என்று நினைத்தேன். ஆனால், சந்தேகம் அடைந்து தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன்.பரிசோதித்த மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை உறுதி செய்தார். என புகாரி தெரிவித்துள்ளார்.
ராமமூர்த்திநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை கைது செய்து மேலும் விசாரித்தனர்.