Home மாவட்டங்கள் பெங்களூர் மாநகராட்சி சார்பில் 40 டன் பழைய பொருட்கள் அகற்றம்

மாநகராட்சி சார்பில் 40 டன் பழைய பொருட்கள் அகற்றம்

சென்னை: செப். 7-
சென்னை மாநகராட்சி சார்பில், பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில், கடந்த சனிக்கிழமை 40 டன் பழைய சோஃபா, மெத்தைகள் உள்ளிட்ட பொருட்கள் அகற்றப்பட்டன. மாநகராட்சியின் செய்திக்குறிப்பில் கூறியதாவது: ஒவ்வொரு சனிக்கிழமையும் மக்கள் முன்கூட்டியே வழங்கும் தகவலின் அடிப்படையில், அவர்கள் வீடுகளிலிருந்து பழைய சோஃபாக்கள், மெத்தைகள், மரச்சாமான்கள், உடைகள் போன்ற திடக்கழிவுகளை சேகரித்து அகற்றும் பணி கடந்த அக்டோபர் 11 முதல் நடைபெற்று வருகிறது.
இதன் அடிப்படையில், கடந்த சனிக்கிழமை மட்டும் 83 நபர்களிடமிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் 39.93 மெட்ரிக் டன் பழைய பொருட்கள் சேகரிக்கப்பட்டன. இவை கொடுங்கையூர் எரியூட்டும் நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு விஞ்ஞான முறையில் எரிக்கப்படுகின்றன.
இந்த பணிக்காக 36 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.