
சென்னை: செப். 7-
தமிழ்நாடு சட்டசபை கூட்டத் தொடர் மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு இன்று மீண்டும் தொடங்கியது. இன்றைய கூட்டத்தில் காவல்துறை மானியக் கோரிக்கை குறித்து முதலமைச்சர் பேசியதற்கு பதிலளிக்க திமுக உறுப்பினர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
முதலமைச்சர் விஜய் பேச்சுக்கு இடையூறு ஏற்படுத்தியதால், திமுகவுக்கு பேச அனுமதி வழங்க முடியாது என்று சபாநாயகர் அறிவித்தார். இதனால் திமுக உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு, முழக்கங்களை எழுப்பினர்.
சுமார் 20 நிமிடங்கள் சட்டசபையில் அமளி நிலவிய நிலையில், திமுக எம்எல்ஏக்கள் பேரவையிலிருந்து வெளியேறினர்.












