
பெங்களூரு: நவ. 12-
கஞ்சா போதையில் இருந்த இளைஞர் மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றபோது, உள்ளூர்வாசிகளால் பிடிக்கப்பட்டான் ஆடுகோடி போலீசார் அவனை கைது செய்தனர். அடுகோடியைச் சேர்ந்த விக்னேஷ் என்கிற தாது கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த நவம்பர் 9 ஆம் தேதி, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் உறவினர் ஒருவரின் திருமணத்திற்குச் சென்றிருந்தனர், அங்கு மாற்றுத்திறனாளி பெண் வீட்டில் தனியாக இருந்தார்.
கஞ்சா போதையில் இருந்த குற்றம் சாட்டப்பட்ட விக்னேஷ், சிறுமி தங்கியிருந்த வீட்டிற்கு சென்று அவரை பலாத்காரம் செய்ய முயற்சி செய்து இருக்கிறான்.
மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பேசவோ நடக்கவோ முடியாது. எனவே அவள் என்ன செய்வது என்று தவித்து கொண்டு இருந்தபோது அவரது தாயார் அங்கு வந்து இருக்கிறார். அந்த இளைஞர் ஆடைகள் இன்றி நிர்வாணமாக எழுந்ததை பார்த்து அலறி கூச்சல் போட்டு இருக்கிறார் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அவனைப் பிடித்து தர்ம அடி கொடுத்து உள்ளனர்
பேசவோ, அசையவோ முடியாத இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதற்காக, காவல்துறையினர் அவனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.















