மாவோயிஸ்டு கமாண்டர் தேவுஜி உட்பட 21 பேர் போலீஸில் சரண்

ஹைதராபாத்: பிப்ரவரி 23-
மாவோயிஸ்டு இயக்​கத்​தின் கமாண்டர் தேவுஜி மற்​றும் அவருடன் சேர்ந்து 20 பேர் போலீ​ஸில் சரணடைந்​த​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது.
நாட்​டில் மாவோ​யிஸ்​டு, நக்​சல்​களின் வன்​முறையை அடுத்த மாதம் மார்ச் 31-ம் தேதிக்​குள் முற்​றி​லும் ஒழிக்​கப்​படும் என்று மத்திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா திட்​ட​வட்​ட​மாக கூறியுள்ளார். அதன்​படி, ஆந்​தி​ரா, தெலங்​கா​னா, சத்​தீஸ்​கர், ஜார்க்​கண்ட் போன்ற மாநிலங்​களில் மாவோ​யிஸ்​டு​களுக்கு எதிரான என்​க​வுன்ட்​டர்​கள் அவ்​வப்​போது நடை​பெற்று வருகின்றன. இதில் பலர் கொல்​லப்​பட்​டுள்​ளனர். ஏராள​மானோர் அந்​தந்த மாநிலங்​களில் சரணடைந்து வரு​கின்​றனர்.
இந்​நிலை​யில், தெலங்​கானா மாநிலத்​தில் தடை செய்​யப்​பட்ட கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் இந்​தி​யாவை (மாவோ​யிஸ்​டு) சேர்ந்த கமாண்​டர் திப்​பிரி திருப்​பதி (எ) தேவுஜி (எ) தேவ்ஜி (62) போலீ​ஸில் சரணடைந்​த​தாகத் தகவல் வெளி​யாகி உள்​ளது. அவருடன் மேலும் 20 மாவோ​யிஸ்​டு​கள் ஆயுதங்​களை ஒப்​படைத்​து​விட்டு சரணடைந்​துள்​ள​தாக​வும் கூறப்​படு​கிறது.
இதுகுறித்து போலீ​ஸார் கூறும்போது, ”மாவோ​யிஸ்டு கமாண்​டர் தேவுஜி எங்​களிடம்​ தான் இருக்​கிறார். அவர் சரணடைந்​தது குறித்து ஒன்​றிரண்டு நாட்​களில் அதி​காரப்​பூர்​வ​மாக பதிவு செய்வோம்” என்று கூறி​யுள்​ளனர்.
கடந்த 2025ம் ஆண்டு மாவோ​யிஸ்ட் மூத்த தலை​வர் நம்​பலா கேசவ ராவ் (எ) பசவ​ராஜ் என்​க​வுன்ட்​டரில் இறந்​தார். அவருக்​குப் பதில் தேவுஜி அந்​தப் பொறுப்​புக்கு மாற்​றப்​பட்​ட​தாக கூறப்படுகிறது. எனினும், இந்​தத் தகவல்​களை மாவோ​யிஸ்டு அமைப்பு மறுத்​துள்​ளது. சரணடைபவர்களுக்கு பல்வேறு மறுவாழ்வு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.