மின்கம்பத்தில் கார் மோதல்:சம்பவ இடத்திலேயே 2 பேர் பலி

சாம்ராஜ்நகர், ஜன. 1: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு சென்று விட்டு திரும்பியபோது, ​​மின்கம்பத்தில் கார் மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் குண்ட்லுபேட்டை தாலுகா கொடசோகே அருகே இன்று அதிகாலை நடந்துள்ளது.
பொம்மல்பூர் சிஇஎஸ்சி அலுவலகத்தில் உதவி அதிகாரியாக இருந்த பிரதாப் (28), மற்றும் கொங்கல்லய்யா சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் பலத்த காயமடைந்த அபி மண்டியா மாவட்டத்தில் உள்ள சிம்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
இது குறித்து தெற்கணாம்பி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இறந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.