சென்னை: நவம்பர் 19-
தங்கம் விலை (Gold rate) கடந்த 6 நாட்களாக சரிந்து வந்த நிலையில் இன்று திடீரென உயர்ந்துள்ளது. கடந்த ஆறு நாட்களில் மட்டும் தங்கம் விலை சென்னையில் சவரனுக்கு ரூ.4,500 குறைந்து இருந்தது. இப்படி தினம் தினம் சர்ப்ரைஸ் கொடுத்து வரும் தங்கம் விலை இன்று பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இன்று மட்டும் சென்னையில் சவரனுக்கு ரூ.800 அதிகரித்துள்ளது. தங்கம் விலையானது உச்சம் தொட்டு தற்போது சற்று குறைந்து வருகிறது. கடந்த மாதம் 17 ஆம் தேதி தங்கம் விலையானது வரலாற்றில் இல்லாத அளவாக ஒரு சவரன் ரூ.97 ஆயிரத்தை தாண்டி விற்பனை ஆனது.
தங்கம் விலை இதனால் கலக்கமடைந்த நகை பிரியர்கள் தங்கத்தை இனி கனவில் தான் வாங்க முடியுமோ என அதிர்ச்சியடைந்தனர். கொஞ்சம் விட்டால் ஒரு சவரன் ரூ.1 லட்சத்திற்கு சென்று இருக்கும். ஆனால் தற்போது தங்கம் விலை கணிசமாக குறைந்துள்ளது. கடந்த மாதத்தோடு ஒப்பிடும் போது சுமார் 5 ஆயிரம் குறைந்துள்ளது. இதனால் தொடர்ந்து இன்னும் தங்கம் குறையும் வாங்கிவிடலாம் என நினைத்தவர்களுக்கு மீண்டும் ஷாக் கொடுத்தது.
பின்னர் ஏறுவதும், இறங்குவதுமாக தங்கம் விலை இருந்து வந்தது. அதன்பிறகு கடந்த சில நாட்களாகவே தங்கம் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது. இதில் மீண்டும் தங்கம் விலையானது ரூ.95 ஆயிரத்தை தாண்டியது.
















