Home செய்திகள் தேசிய செய்திகள் முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரியை கேரள முதல்வரின் செயலாளராக நியமிக்க எதிர்ப்பு

முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரியை கேரள முதல்வரின் செயலாளராக நியமிக்க எதிர்ப்பு

திருவனந்தபுரம், மே 26- கேரளா​வில் சமீபத்​தில் நடை​பெற்ற சட்டப்பேரவை தேர்​தலுக்கு பிறகு காங்​கிரஸ் தலை​மையி​லான கூட்​டணி ஆட்​சிக்கு வந்​துள்​ளது. புதிய முதல்​வ​ராக வி.டி.சதீசன் கடந்த 18-ம் தேதி பதவி​யேற்​றார்.
இந்​நிலை​யில், தலைமை தேர்​தல் அதி​காரி​யாக சமீபத்​திய தேர்தலை கண்​காணித்​த ரத்​தன் யு.கேல்​கர் முதல்​வரின் செயலாள​ராக நியமிக்​கப்​பட்​டுள்​ளார். இது சர்ச்​சையை ஏற்​படுத்தி​யுள்​ளது. தேர்​தலை நடத்​திய அதி​காரியை நேரடி​யாக முதல்​வர் அலு​வல​கத்​துக்கு மாற்​று​வது தேர்​தல் நடுநிலைமை குறித்த மக்​களின் பார்​வையை சீர்​குலைக்​கும் என்று எதிர்க்​கட்சிகள் வாதிடு​கின்​றன. இந்த இடமாற்​றம் கேல்​கரின் சேவை​களுக்​கான வெகுமதி என்று மார்க்​சிஸ்ட், பாஜக ஆகிய கட்​சிகள் குற்​றம் சாட்​டி​யுள்​ளது.
தேர்தல் நம்​பகத்​தன்மை குறித்​தும் அக்​கட்​சிகள் கேள்வி எழுப்பியுள்​ளன. சமீபத்​தில் நடை​பெற்ற மேற்கு வங்க தேர்​தலுக்கு பிறகு தலைமை தேர்​தல் அதி​காரி​யாக பணி​யாற்​றிய மனோஜ் அகர்​வால், மாநில தலை​மைச் செய​லா​ள​ராக நியமிக்​கப்​பட்​டார். அப்​போது காங்​கிரஸ் எம்​.பி ராகுல் காந்​தி​யும் பிற கட்​சித் தலை​வர்​களும் பாஜக மற்​றும் தேர்​தல் ஆணை​யத்தை கடுமை​யாக சாடினர். இந்​நிலை​யில் காங்​கிரஸின் அதே வாதங்​களை பயன்​படுத்​தி​யும் காங்​கிரஸ் இரட்டை நிலைப்​பாட்டை சுட்​டிக்​காட்​டி​யும் பாஜக விமர்​சிக்​கிறது. இந்​நிலை​யில் கேல்​கரின் நியமனத்​தில் முறைகேடு எது​வும் இல்லை என்று முதல்​வர் சதீசன் கூறி​யுள்​ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “ஒரு தலைமை தேர்​தல் அதி​காரி, தேர்​தலுக்​குப் பிறகு ஓய்வு பெறு​வ​தில்​லை. அவருக்கு புதிய பதவி வழங்​கப்பட வேண்​டும். முன்​னாள் நிதி​யமைச்​சர், முந்​தைய முதல்​வரின் செய​லா​ள​ராக கேல்​கர் பணி​யாற்​றி​யுள்​ளார்.