முன்னாள் மத்திய அமைச்சர்சிவராஜ் பாட்டீல் காலமானார்

மும்பை: டிசம்பர் 12-
முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீல் மஹாராஷ்டிராவில் இன்று (டிசம்பர் 12) காலமானார். அவருக்கு வயது 90.
மஹாராஷ்டிரா மாநிலம் லத்தூரை சேர்ந்தவர் சிவராஜ் பாட்டீல். இவர் தனது நீண்ட கால அரசியல் வாழ்க்கையில் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ளார். இவரது மகன் சைலேஷ் பாட்டீல், மருமகள் அர்ச்சனா, மற்றும் இரண்டு பேத்திகள் உள்ளனர்.
சிவராஜ் பாட்டீல் 2004 முதல் 2008 வரை மத்திய உள்துறை அமைச்சராகவும், 1991 முதல் 1996 வரை லோக்சபாவின் சபாநாயகராகவும் இருந்தார். பஞ்சாப் கவர்னராக இருந்த சிவராஜ் பாட்டீல், 2010ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் நிர்வாகியாகவும் பணியாற்றினார்.அக்டோபர் 12, 1935ல் பிறந்த பாட்டீல், லத்தூரின் நகராட்சி மன்றத் தலைவராக தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். பின்னர், அவர் லத்தூர் லோக்சபா தொகுதியில் ஏழு முறை வெற்றி பெற்றார்.இவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.இவரது இறுதிச்சடங்குகளுக்கு அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகிறது என சிவராஜ் பாட்டீல் குடும்பத்தினர் தெரிவித்தனர்.