மூளையை உண்ணும்அமீபா நோயால் உயிரிழந்தோர் 23 ஆக உயர்வு

திருவனந்தபுரம்: அக்.13-
கேரளா​வில் மூளையை உண்​ணும் அமீபா நோயால் இது​வரை 104 பேர் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். உயி​ரிழந்​தோர் எண்​ணிக்கை 23 ஆக உயர்ந்​துள்​ளது.
இதுகுறித்து கேரள சுகா​தா​ரத் துறை அமைச்​சர் வீணா ஜார்ஜ் முகநூல் பக்​கத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது:
கடந்த 2023-ம் ஆண்டு கோழிக்​கோடு நகரைச் சேர்ந்த ஒரு​வருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்​பது கண்​டறியப்​பட்​டது. இதையடுத்​து, மூளைக் காய்ச்​சலால் பாதிக்​கப்​படு​வோரின் விவரங்​களை கட்​டாய​மாக பதிவு செய்​வதுடன் அதற்​கான காரணங்​களைக் கண்​டறியவும் உத்​தர​விடப்​பட்​டது. இதையடுத்து 2024 முதல் மூளைக்​காய்ச்​சல் நோய் பாதிப்பு குறித்து பதிவு செய்​யப்​பட்​டது. இதில் சிலருக்கு ஏற்​பட்ட பாதிப்​புக்கு மூளையை உண்​ணும் அமீபா தொற்று காரணம் என தெரிய​வந்​தது.
அந்த வகை​யில் இது​வரை 104 பேருக்கு இந்த நோய் கண்​டறியப்​பட்​டுள்​ளது. இந்த நோய்க்கு உயி​ரிழந்​தோர் எண்​ணிக்கை 23 ஆக அதி​கரித்​துள்​ளது. கொல்​லம் மற்​றும் திரு​வனந்​த​புரம் மாவட்​டங்​களில் அதிக பாதிப்பு காணப்​படு​கிறது. கோழிக்​கோடு மற்​றும் மலப்​புரம் மாவட்​டங்​களி​லும் இந்த பாதிப்பு கணிச​மாக அதி​கரித்து வரு​கிறது.
ஒன் ஹெல்த் திட்டம்: அமீபா தொற்றை முன்​கூட்​டியே கண்​டறிய​வும் தொற்று பரவுவதைத் தடுக்​க​வும் ‘ஒன் ஹெல்த்’ என்ற திட்​டத்​தின் கீழ் நடவடிக்கை எடுக்​கப்​பட்டு வரு​கிறது.
இதனால் உலக நாடு​களு​டன் ஒப்​பிடும்​போது கேரளா​வில் இந்த நோயால் உயி​ரிழப்​போர் எண்​ணிக்கை குறை​வாக உள்​ளது. இவ்​வாறு அமைச்சர் வீணா​ கூறி​யுள்​ளார்​.