மூளையை தின்னும் அமீபா.. கேரளாவில் ஒரே மாதத்தில் 7 பேர் பலி

திருவனந்தபுரம்: நவம்பர் 22
கேரளாவில் சமீப காலமாக மூளையை தின்னும் அமீபா நோய் மிகவும் வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. நவம்பர் மாதத்தில் மட்டும் தற்போதுவரை அந்த நோயால் பாதிக்கப்பட்டு 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் மூளையை தின்னும் அமீபா நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் கேரளா மற்றும் அதன் அண்டை மாநிலங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலத்தில் இயற்கை சீற்றங்களுக்கும், நோய் பரவலும் சற்று அதிகமாகவே இருக்கும். பன்றி காய்ச்சல், பறவை காய்ச்சல், நிபா வைரஸ், கொரோனா வைரஸ் உள்ளிட்ட நோய்கள் அதிகளவு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக கேரளாவில் கடந்த சில மாதங்களாக மூளையை தின்னும் அமீபா நோய் வேகமாக பரவி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. Also Read “வெள்ளையான நிறத்தில் குற்றாலம் மெயின் அருவியில் மலைப்பாம்பு! கிட்ட பார்த்தால்? ஆடிப்போன தென்காசி” 40 பேர் உயிரிழப்பு நவம்பர் மாதத்தில் மட்டும் தற்போதுவரை சுமார் 20 பேர் மூளையை தின்னும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 7 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். மொத்தமாக கேரளா மாநிலத்தில் மூளையை தின்னும் அமீபா நோயால் சுமார் 250 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 40 பேர் உயிரிழந்துள்ளனர் என்று கேரளா மாநில சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.. திருவனந்தபுரம் அருகே உள்ள அனடு பகுதியைச் சேர்ந்தவர் வினயா (வயது 26). இவருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல்நிலை மோசமானதால் திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மூளையை தின்னும் அமீபா நோயால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இல்லத்தரசி பலி கடந்த 40 நாட்களாக அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன் தினம் உயிரிழந்தார். கேரளா மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள், “வினயாவுக்கு அந்த வைரஸ் எப்படி பரவியது என்று விசாரணை நடத்தி வருகிறோம். அவர் இல்லத்தரசியாக தான் உள்ளார். தன் வீட்டு கிணற்றில் இருந்த தண்ணீரை குடித்தபோது இந்த நோய் பரவியிருக்கும் என்று சந்தேகிக்கிறோம். இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரிகள் கோழிக்கோடு, மலப்புரம், திருவனந்தபுரம், கொல்லம் பகுதிகளில் ஆய்வு நடத்த உள்ளனர். அங்குதான் பாதிப்புகள் அதிகம் இருக்கும் நிலையில் வைரஸ் எப்படி பரவியது என்று ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளனர். மாநிலத்தில் மூளையை தின்னும் நோய் பரவிக் கொண்டிருக்கிறது. மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். மக்கள் அச்சம் அந்த அமீபா மூக்கு வழியாக நுழைந்து உடலுக்குள் சென்று பாதிப்பை ஏற்படுத்துகிறது. மக்கள் மாசுபட்ட நீர் நிலைகள் மற்றும் குளோரின் கலக்கப்பட்டாத நீர் நிலைகளில் குளிக்கும்போது இந்த அமீபா தாக்குதலுக்கு உட்படுத்தப்படுகின்றனர். அப்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். முடிந்தவரை அதுபோன்ற நீர் நிலைகளில் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும்.