மெரினா கடற்கரைக்கு நீலக்கொடி அந்தஸ்து கிடைக்க உரிய நடவடிக்கை

சென்னை: டிசம்பர் 23-
டென்​மார்க்கை சேர்ந்த சுற்​றுச்​சூழல் கல்வி அறக்​கட்​டளை நிறு​வனம், உலகம் முழு​வதும் உள்ள பல்​வேறு கடற்​கரைகளின் தூய்​மை, திடக்​கழிவு மேலாண்​மை, சுற்​றுச் ​சூழல் பாது​காப்​பு, சுற்​றுலா வளர்ச்சி உள்ளிட்ட பல்​வேறு அம்​சங்​களை ஆராய்ந்து சர்​வ​தேச அங்கீ​காரத்​துக்​கான நீலக்​கொடி சான்​றிதழை அளித்துவரு​கிறது.
தமிழகத்​தில் ஏற்​கெனவே கோவளம் கடற்​கரைக்கு அந்த சான்​றிதழ் கிடைத்​துள்​ளது. இந்​நிலை​யில், உலகின் 2-​வது பெரிய கடற்​கரை​ மற்றும் இந்​தி​யா​வின் மிக நீள​மான சுமார் 13 கிமீ தூர​முடைய மெரினா,
திரு​வான்​மியூர் உள்​ளிட்ட 6 கடற்​கரைக்​கும் நீலக்​கொடி சான்​றிதழ் பெற தமிழக அரசு முயற்​சிகளை மேற்​கொண்டு வரு​கிறது. இதற்​காக மெரினா கடற்​கரை​யில் ரூ. 5.60 கோடி​யில் இரும்பு நடை​பாதை, சைக்​கிள் தடங்​கள், விளை​யாட்டு பகு​தி, மாற்​றுத் திற​னாளி​களுக்​கான சக்கர நாற்​காலி பாதை, நிழற்​குடைகள், விளை​யாட்டு சாதனங்​கள், திறந்​தவெளி உடற்​ப​யிற்சி கூடங்​கள், சுழலும் கண்​காணிப்பு கேம​ராக்​கள், கடற்​கரைக்கு மெரு​கூட்​டும் மரங்​கள், இருக்​கைகள், குப்பை தொட்​டிகள் அமைக்​கப்​பட்டு வரு​கின்​றன.
இதன் ஒரு பகு​தி​யில் மெரினாவில் உள்ள நடை​பாதை கடைகளும் சீரமைக்​கப்​பட்டு வரு​கின்​றன.
இந்​நிலை​யில், மெரினாவில் தனக்​கும் கடை ஒதுக்​கக்​கோரி தேவி என்​பவர் உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தார். அந்த வழக்கை விசா​ரித்த உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள் ஆர்​.சுரேஷ்கு​மார். பி.டி.ஜெகதீஷ் சந்​திரா ஆகியோர், மாநக​ராட்சி மற்​றும் சுற்​றுச்​சூழல் துறை சார்​பில் மெரினா கடற்​கரை​யில் கடைகள் ஒதுக்​கீடு தொடர்​பான அறிக்கை தெளிவற்ற நிலை​யில் இருப்​ப​தாகக் கூறினர்.