
திருப்பதி: ஏப்ரல் 25 –
மே மாதம் திருப்பதிக்கு செல்ல ரூ 300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் கிடைக்கவில்லையா, கவலை வேண்டாம், இன்று காலை 10 மணிக்கு சீனிவாச திவ்ய அனுகிரக ஹோமத்திற்கான டிக்கெட்டுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
திருமலை திருப்பதிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். அது போல் விசேஷ நாட்களில் லட்சக்கணக்கானோர் வருகை தருகிறார்கள். இந்த நிலையில் ஏழுமலையானை தரிசிக்க மாதந்தோறும் 24 ம் தேதி ரூ 300 தரிசன டிக்கெட்டுகளும் சேவா டிக்கெட்டுகளும் ரிலீஸ் செய்யப்படுகின்றன.
அதாவது 90 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்தால் மட்டுமே ஏழுமலையானை கட்டண தரிசனத்திலோ சேவையிலோ தரிசிக்கலாம். இல்லாவிட்டால் நடைபாதை தரிசனம் அல்லது இலவச தரிசனத்தில்தான் செல்ல முடியும். இந்த ஆண்டு மே மாதத்திற்கு டிக்கெட்டுகள் விற்கப்பட்டுவிட்டன. இந்த நிலையில் ஜூலை மாதத்திற்கான டிக்கெட்டுகளின் அட்டவணை கடந்த 21 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த நிலையில் ஜூலை மாதத்திற்கான ரூ 300 சிறப்பு தரிசன டிக்கெட் நேற்று வெளியானது. மொத்தம் 4.09 லட்சம் டிக்கெட்டுகள் ரிலீஸ் செய்து அத்தனையும் 10 நிமிடங்களுக்குள்ளாக விற்றுத் தீர்ந்தன. இதைத் தொடர்ந்து மாலை 3 மணிக்கு அறைகள் புக்கிங் நடந்தது. அதிலும் 37 ஆயிரத்து சொச்சம் எண்ணிக்கையிலான அறைகள் திருமலையில் மட்டும் ரிலீஸ் ஆனது. அவையும் சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன. எனவே இனி திருப்பதிக்கு செல்ல வேண்டுமானால் இலவச தரிசனம், இலவச தரிசன டோக்கன், நடைபாதை தரிசனம் போன்றவற்றில்தான் செல்ல வேண்டும் என நீங்கள் நினைத்தால் தவறு.
மே மாதம் ரூ 300 தரிசன டிக்கெட்டில் செல்லலாமே! எப்படி தெரியுமா? அதாவது ஸ்ரீனிவாச திவ்ய அனுகிரக விசேஷ ஹோமம் என்பது அலிபிரி அருகே இருக்கும் கோயிலில் நடைபெறும். இதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே ஆன்லைனில் புக் செய்ய வேண்டும். இதற்கு ஒவ்வொரு மாதமும் 24 அல்லது 25 தேதிக்கு புக்கிங் செய்யப்படுகிறது.



















