டெல்லி, ஆகஸ்ட் 25- பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின உரையில் தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும் எனக் கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து ஜிஎஸ்டி அடுக்குகளைக் குறைப்பது தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கிடையே ஜிஎஸ்டி வரி குறைப்பு எப்போது அமலுக்கு வரும் என்பது தொடர்பாகச் சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் ஜிஎஸ்டி அடுக்குகளில் செய்யும் மாற்றம் குறித்த தகவல்களைப் பகிர்ந்திருந்தார். அதாவது தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி வரி அடுக்குகள் எளிமையாக்கப்படும் என்றும் இதன் மூலம் மக்களின் வரிச்சுமை குறையும் என்றும் அவர் கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து 12% மற்றும் 28% வரி அடுக்குகளை நீக்குவது குறித்து ஆலோசனைகள் நடந்தன.
















